மகாதீரை வெளியேற்ற மூளையாக இருந்தது நான்தான்! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

லிப்பிஸ்‌, ஆகஸ்ட் 11 - தடை செய்யப்படுவதிலிருந்து கட்சியைக்‌ காப்பாற்றும்‌ ஒரு நடவடிக்கையில்‌, துன்‌ மகாதீர்‌ முகமதுவை கட்சியிலிருந்து வெளியேற்றுவதில்‌ முக்கிய மூளையாக தாம்‌ செயல்பட்டதை, அம்னோ தலைவர்‌ டத்தோ ஸ்ரீ அஹ்மாட்‌ ஸாஹிட்‌ ஹமிடி வெளிப்படையாக ஒப்புக்‌கொண்டிருக்கின்றார்‌.

அம்னோவின்‌ பதிவை ரத்து செய்ய விரும்பிய டாக்டர்‌ மகாதீருக்கு எதிராகச் செயல்பட வேண்டிய அத்தகைய செயல்‌, அப்போது ஒரு முக்கிய அசாதாரணமான நடவடிக்கையாக இருந்தது என்றும்‌ அவர்‌ வருணித்துள்ளார்‌. 

“ஜெலாயில்‌ உள்ள சுங்கை கோயான்‌ பெல்டாவில்‌ இன்று, உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்க நான்‌ விரும்புகிறேன்‌... அம்னோவின்‌ நலனுக்காக அந்த சமயத்தில்‌ டாக்டர்‌ மகாதீரை வெளியேற்றியவர்களில்‌ பிரதான மூளையாக நான்‌ இருந்தேன்‌ என்பதை நான்‌ அவசியம்‌ ஒப்புக்‌ கொள்ள வேண்டியுள்ளது. 

அம்னோ மீது அவதூறுகள்‌, அவமதிப்புகள்‌, பல்வேறு குற்றச்சாட்டுகள்‌ சுமத்தப்பட்டன... கொள்ளையர்கள்‌ அல்லது ஊழல்வாதிகள்‌ என்றும்‌ முத்திரைகள்‌ குத்தப்பட்டன.  தடைசெய்யப்பட வேண்டும்‌ என்று விரும்பப்படுக்றது என்பதை நான்‌ அறிந்ததும்‌ நான்‌ அவ்வாறு செயல்பட்டேன்‌. இதை டத்தோ ஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிம்‌, உறுதிப்படுத்தினார்‌” என்று துணைப்‌ பிரதமருமான ஸாஹிட்‌ தெரிவித்தார்‌. 

அம்னோவை தடை செய்வது தொடர்பிலான அறிக்கைகள்‌, அப்போதைய உள்துறை அமைச்சரின்‌ மேஜையில்‌ இருப்பது குறித்து அன்வார்‌ தம்மிடம்‌ தகவல்‌ தெரிவித்ததாக ஸாஹிட் கூறினார். ‌

அக்காலகட்டத்தில்‌ டாக்டர்‌ மகாதீர்‌ பிரதமராக இருந்தார்‌. அப்போது, பாகோ நாடாளுமன்ற உறுப்பினரும்,‌ பெர்சத்து கட்சித்‌ தலைவருமான டான்‌ ஸ்ரீ முஹிடின்‌ யாசின்‌ உள்துறை அமைச்சராக இருந்தார்‌.  அத்தகைய ஓர்‌ இக்கட்டான சூழ்நிலையில்‌ உறுப்பினர்கள்‌, குறிப்பாக கட்சித்‌ தலைமைத்துவம்‌,   அம்னோ தடை செய்யப்படாமல்‌ இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த அணுகுமுறையை அடையாளம்‌ காண்பதில்‌ என்னையே நம்பியிருந்தது. ஆதலால்‌, அதற்கான ஒரு வழியைக்‌ கண்டு பிடிக்க வேண்டிய நிலையிலும்‌ நான்‌ இருந்தேன்‌.  “

கடந்த 2018ஆம்‌ ஆண்டில்‌ நடந்த அம்னோ பொதுப்‌ பேரவையின்போது நடந்ததை நீங்கள்‌ அனைவரும்‌ அறிவீர்கள்‌. அதில்‌ நான்‌, அம்னோவினால்‌ அரசாங்கத்தை அமைக்க முடியாமல்‌ போனால்‌, விரைவில்‌ அரசாங்கத்தில்‌ ஓர்‌ அங்கமாக அம்னோ இடம்‌ பெற்றிருக்கும்‌ என்று கூறியிருந்தேன்‌. அத்தகைய கருத்துக்களை வெளியிட்டபோது சில தனிநபர்களால்‌ நான்‌ கேலி செய்யப்பட்டேன்‌ என்று, பகாங்‌, லிப்பிஸுக்கு அருகில்‌ உள்ள லாமான்‌ செஜாத்தெரா ஜெலாயிலில்‌, கேமரன்‌ மலை அம்னோ தொகுதிப்‌ பேராளர்கள்‌ கூட்டத்தை நேற்று சனிக்கிழமை துவக்கி வைத்து உரையாற்றும்போது, தேசிய முன்னணி தலைவருமான ஸாஹிட்‌ தெரிவித்தார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *