மலேசிய ஆண்களில் மூன்றில் இரண்டு பேருக்கு விறைப்புத்தன்மை குறைபாடு! - சுகாதாரத்துறை துணை அமைச்சர் தகவல்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 20: மலேசிய ஆண்களில் மூன்றில் இரண்டு பேருக்கு விறைப்புத்தன்மை குறைபாடு அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை துணை அமைச்சர் லுகானிஸ்மான் அவாங் சௌனி இன்று தெரிவித்தார்.

2019 தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மை கணக்கெடுப்பின் (NHMS) அடிப்படையில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய ஆண்களில் 31.6% பேருக்கு மிதமான முதல் கடுமையான அளவு விறைப்புத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விறைப்புத்தன்மை குறைபாடு என்பது அரிதாகவே விவாதிக்கப்படும் ஒரு நிலை, ஆனால் அது மலேசிய ஆண்களிடையே ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறி வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களில் 69.5% பேர் தற்போது இந்தப் பிரச்னையை அனுபவித்து வருகின்றனர் அல்லது அனுபவித்துள்ளனர் என்று தரவுகள் காட்டுகிறது என்று அவர் இன்று விறைப்புத்தன்மை குறைபாட்டை நிர்வகிப்பதற்கான மருத்துவ பயிற்சி வழிகாட்டுதல் திட்டமான CPGயை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த CPG பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது, மேலும் இப்பிரச்னைக்கு விரிவான சிகிச்சையை வழங்குவதற்கான குறிப்பாக மருத்துவ வல்லுநர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சங்கங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது  என்று அவர் கூறினார்.

ஆண்கள் வெட்கப்படக்கூடாது, மேலும் பெண்களும் அவர்களின் இணையருக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

விறைப்புத்தன்மை என்பது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு போன்ற காரணங்களால் ஏற்படலாம் என்றும்,  சிகிச்சையளிக்கப்பட வேண்டிய ஒரு மருத்துவ நிலை என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

Dua daripada tiga lelaki Malaysia berisiko mengalami masalah ereksi, menurut Timbalan Menteri Kesihatan. Masalah ini meningkat dengan usia, terutama selepas 40 tahun. Garis panduan CPG diperkenalkan bagi rawatan menyeluruh. Lelaki digalakkan mendapatkan rawatan tanpa malu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *