தமிழ்நாட்டில் இரண்டு குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ்!

- Muthu Kumar
- 07 Jan, 2025
தமிழகத்தில் இரண்டு குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் தொற்று பாதிப்பு தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எச்.எம்.பி.வி. வைரஸ் புதிது அல்ல. இது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் ஆகும். 2001-ம் ஆண்டு இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நோய்த்தொற்றுகள் சுயக்கட்டுப்பாடு, உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்து கொள்வது, ஓய்வு எடுப்பது உள்ளிட்ட கவனிப்புடன் சரிசெய்யப்படுகின்றன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முககவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளே எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றுக்கும் பொருந்தும்.இந்த வைரஸ் தொற்று கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் பீதி அடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *