ஆயர் கூனிங் வெற்றி! – அது ‘UMDAP’ வெற்றி! – ஹாடி அவாங்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 30: கடந்த வார இறுதியில் நடந்த ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் பாரிசன் நேஷனல் (பிஎன்) பெற்ற வெற்றியை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று குறைமதிப்புக்கு உட்படுத்தி தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது எதிர்கால பொதுத் தேர்தல் அல்லது மாநில தேர்தல்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவர் கூறினார்.

இடைத்தேர்தலில் பாரிசான் வேட்பாளர் யூஸ்ரி பக்கீரின் வெற்றி, பொதுவாக ‘UMDAP’ என்று குறிப்பிடப்படும் அம்னோ-டிஏபி கூட்டணியிலிருந்து உருவானது என்று மராங் எம்பியுமான அவர் கூறினார்.

அந்தக் கட்சி வெளிப்படையாக இஸ்லாத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்தது என்று அவர் கூறினார்.

 முஸ்லிம்-மலாய் பகுதிகளில் சட்டவிரோத பன்றி வளர்ப்பு போன்ற சர்ச்சைகளும் இதில் அடங்கும்  என்று அவர் கூறினார்.

ஆயர் கூனிங்கில் உள்ள பல மலாய்-முஸ்லிம் வாக்காளர்கள் முற்போக்கான மற்றும் தாராளவாத இஸ்லாம் என்ற கருத்தையும், DAP-யின் பிம்பத்தை சுத்தப்படுத்த UmDAP மேற்கொண்ட முயற்சிகளையும் நிராகரித்தனர் என்று அவர் கூறினார்

ஏனெனில் இவை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானவை - குறிப்பாக பன்றி வளர்ப்புடன் தொடர்புடைய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் எதிர்த்தனர் என்று ஹாடி கூறினார்.

பன்றிப் பண்ணைகள் பிரச்சினை பிஎன்-க்கு ஒரு மையப் பிரச்சாரப் புள்ளியாக இருந்தது, மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அவற்றின் இருப்பு குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது!

Hadi Awang memperkecilkan kemenangan BN di Ayer Kuning, menyatakan ia tidak beri kesan besar pada pilihan raya akan datang. Beliau dakwa kemenangan hasil kerjasama Umno-DAP, yang didakwa bertentangan dengan prinsip Islam terutama isu penternakan babi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *