சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே என்னுடைய முதல் பணி - அருண் ஐபிஎஸ்!

top-news
FREE WEBSITE AD

சென்னை காவல் ஆணையராக பதவி ஏற்ற  அருண் ஐபிஎஸ் சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே என்னுடைய முதல் பணி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்

சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கண்டுபிடிக்க, போக்குவரத்து சிக்கல்களை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் காவல்துறையின் நடவடிக்கை இருக்கும். என்னிடம் பொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அருண் ஐபிஎஸ் தெரிவித்தார்.

அருண் ஐபிஎஸ் ஏற்கனவே கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னையில் காவல்துணை ஆணையராக பதவி வகித்த அருண், திருச்சி, மதுரையில் ஆணையராக பதவி வகித்தார்

ஆவடி மாநகரின் முதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் அருண் ஐபிஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் படுகொலை செய்யப்பட்டது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தன.

மேலும் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாளவன் கூட உண்மையான குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்ற குற்றச்சாட்டையும், உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில் அதிரடி மற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *