MH 17 விவகாரம்; புடினிடம் பேசினேன் - அன்வார்!

- Muthu Kumar
- 15 May, 2025
மாஸ்கோ, மே 15:
2014 ஆம் ஆண்டு உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH17 தொடர்பான பிரச்சினையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நேற்றைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின் போது எழுப்பினார்.
கிரெம்ளினில் ரஷ்ய அதிபர் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்த விஷயம் எழுப்பப்பட்டதாக அன்வார் கூறினார்.நிச்சயமாக, மலேசிய மக்களின் பிரதிநிதியாக, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதியாக, தங்கள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இந்தப் பிரச்சினையை எழுப்புவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக மலேசிய ஊடகங்களுக்கு அவர் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு உக்ரைன் மீது MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா தான் காரணம் என்று சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) கருத்து குறித்து அன்வாரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அந்த விமானம் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதக் குழுக்களுக்கும் உக்ரேனியப் படைகளுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், கிழக்கு உக்ரைன் மீது பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அந்த அமைப்பு குறிபிட்டிருந்தது.
இந்நிலையில் தனது கவலைகளை புடின் கவனமாகக் கேட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்ததாகவும் பிரதமர் கூறினார்.
அதில் இருந்து, அவர் (புடின்) ஒருபோதும் பின்வாங்கவில்லை என்று அன்வார் கூறினார். மேலும் விரிவான மற்றும் அரசியல் ரீதியான விசாரணைக்கான அழைப்பையும் அவர் விடுத்துள்ளதாக அன்வார் தெரிவித்தார். அவர் ஒத்துழைக்க விரும்பவில்லை என்று கூறியது உண்மையல்ல என்று அன்வார் கூறினார்.
Perdana Menteri Anwar Ibrahim membangkitkan isu MH17 dalam pertemuannya dengan Presiden Rusia, Vladimir Putin. Beliau menyampaikan kebimbangan dan simpati kepada keluarga mangsa serta menyeru siasatan menyeluruh. Putin mendengar namun tidak mengakui sebarang kesalahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *