தேசிய பறவை ஹார்ன்பில்
- Muthu Kumar
- 06 May, 2024
நம் மலேசிய நாட்டின் தேசியப் பறவையான ஹார்ன்பில் பறவையை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
தமிழில் இருவாய்ச்சி என அழைக்கப்படும் ஹார்ன்பில் பறவை நம் நாட்டின் வரலாற்றில் முக்கியமான அற்புத பறவையாகும். நாட்டின் பழங்குடியின மக்களால் புனிதமான பறவையாகவும், உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் புராணங்களில் சொல்லப்படுகிறது.
ஹார்ன்பில் பறவை உருவத்தில் சற்று பெரியதாக இருக்கும், அதனால் இந்த பறவைகள் பறக்கும் போது ஒரு சிறிய ரக விமானம் போல் காட்சியளிக்கும். அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய இந்த பறவைகள் பெரிய அலகுகளை கொண்டவை. ஹார்ன்பில் பறவைகளின் அலகுக்கு மேல் "காஸ்க்" என்று அழைக்கப்படும் கொண்டை போன்ற அமைப்பு பார்ப்பதற்கு இரண்டு வாய் போன்று தோற்றமளிக்கும். சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஹார்ன்பில் பறவையின் வாழ்நாள் காலம் ஆகும்.
பழங்கள் பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளை உண்ணும் அனைத்து உண்ணிகளாக ஹார்ன்பில் பறவை விளங்குகிறது. இந்த பறவைகளின் நாக்கு குட்டையாக இருப்பதனால் உணவுகளை அலகின் மூலம் தூக்கிப்போட்டு பிடித்து சிறிது சிறிதாக வாய்க்குள்ளே கொண்டு செல்கிறது.
பழங்களை நன்கு உண்ணும் திறன் படைத்த ஒரு வகையான ஹார்ன்பில் பறவைகள் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. சிறு விலங்குகளை உண்ணும் மற்றொரு வகையான ஹார்ன்பில் வகை பறவைகள் திறந்த வெளியில் வாழ்கின்றன. காடுகளில் அதிக மரங்கள் உருவாகுவதற்கு ஹார்ன்பில் பறவைகளின் பங்கு மிக முக்கியமானது. ஏனென்றால் பழங்களை உண்ணும் பெரும்பாலான இந்த வகை பறவைகள் தான் பழங்களின் விதைகளை காடுகளில் பரப்பும் வேலைகளில் செயல்பட்டு வருகிறது.
ஹார்ன்பில் பறவைகளின் இனப்பெருக்க காலம் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஆகும். இந்த பறவைகள் எப்பொழுதும் தன் துணையோடு தான் வாழும். ஆண் பெண் இரு ஹார்ன்பில் பறவைகள் இனப்பெருக்கத்தின் போது உயரமான மரங்களில் உள்ள கூடுகளை தேர்வு செய்யும். மரப்பொந்துகளை தான் ஹார்ன்பில் பறவைகளின் கூடுகள் என்பார்கள். பெண் பறவை கூட்டுக்குள் சென்றவுடன் ஆண் பறவை அதன் பின் செல்லும். இரு பறவைகளும் கூடிய பிறகு ஆண் பறவை தன் எச்சின் வழியாகவோ அல்லது ஆறுகளில் இருந்து எடுத்து வந்த ஈரமான மண்ணைக் கொண்டோ பெண் பறவைக்கு உணவு கொடுக்க சிறு துவாரத்தை மட்டும் விட்டுவிட்டு கூட்டை மூடிவிடும். கூட்டிற்குள் இருக்கும் ஹார்ன்பில் பெண் பறவை தன் இறக்கை முழுவதையும் உதிர்த்து விட்டு மெத்தை போல மாற்றி அதன் அதன் மேல் தன் முட்டைகளை இடும். இந்த பறவைகள் மூன்று முட்டைகள் வரை இடும். ஏழு வாரங்கள் கழித்து முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே வர ஆரம்பிக்கும். குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளிவரும் வரை பழங்களையும், பூச்சிகளையும் பெண் பறவைக்கு ஆண் பறவை சிறிய துவாரத்தின் வலி ஊட்டி விடும். குஞ்சுகள் வெளிவந்த பின் பெண் பறவை கூட்டை உடைத்து விட்டு வெளியே வரும். பின் ஆண் பெண் பறவைகள் ஒன்றாக சேர்ந்து உணவு தேடி தன் குஞ்சுகளுக்கு ஊட்டி விடும். ஹார்ன்பில் பறவைகள் இனத்திற்கு இந்த செயல்பாடு தனிச்சிறப்பு.
ஒருவேளை ஆண் ஹார்ன்பில் பறவைகள் தன் துணைக்கும், தன்னுடைய குஞ்சுகளுக்கும் உணவு தேடிச்செல்லும் வழியில் வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்டாலோ அல்லது இறந்து போக நேர்ந்தாலோ தன் துணையும், தன்னுடைய குஞ்சுகளும் பசியால் இறந்து விட வேண்டியது தவிர வேறு வழி இல்லை. உலகில் தன் துணையோடு கடைசி காலம் வரை வாழும் ஒரு பறவை என்றால் அது ஹார்ன்பில் பறவையினம் மட்டுமே..
உலகம் முழுவதும் 54 வகை ஹார்ன்பில் பறவைகள் உள்ளது. இந்தியாவில் 9 வகை ஹார்ன்பில் பறவைகள் காணப்படுகிறது. இந்தப் ஹார்ன்பில் பறவைகளை இலக்கியங்களில் மலை முழுங்கான் என்று என்று வர்ணித்துள்ளனர் வர்ணித்துள்ளனர். சில வகையான ஹார்ன்பில் பறவைகள் இந்தியாவில் உள்ள கேரளா, அருணாச்சலப் பிரதேச மாநில அரசின் மாநில பறவையாகவும்.. மியான்மர் நாட்டில் உள்ள சீன் மாநில அரசின் மாநில பறவையாகவும் அறிவித்துள்ளனர்..
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *