மனிஷா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் மிரட்டிய ஆடவர்!

top-news

கோலாலம்பூர், ஜூலை 3: Cyberjaya பல்கலைக்கழக மாணவி Maniishapriet Kaur கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை நீதிமன்ற வளாகத்தில் மனிஷாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் தாக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  SEPANG Majistret நீதிமன்றத்திற்கு Maniishapriet Kaur கொலை வழக்கில் சம்மந்தப்பட்டதாக நம்பப்படும் 2 இளம்பெண்கள் மற்றும் ஆடவர் ஒருவர் விசாரணைக்காக இன்று காலை 9.50 மணிக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் Maniishapriet Kaur குடும்பத்தைச் சேர்ந்தவர் என நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டவர்களை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி தாக்க முன் வந்ததால் நீதிமன்ற வளாகம் பரபரப்பானது.

இச்சம்பவத்தின் போது நீதிமன்ற வளாகத்திலிருந்த காவல்துறை அதிகாரிகள் கூச்சலிட்ட ஆடவரைக் கட்டுப்படுத்தியதாகவும், சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் இது மாதிரியான சம்பவம் நிகழ்ந்திருப்பதால் கைது செய்யப்பட்டிருக்கும் மூவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென சந்தேகநபர்களின் வழக்கறிஞர் Manoharan Malayalam காவல்துறையைக் கேட்டுக்கொண்டார். Cyberjaya பல்கலைக்கழக மாணவி Maniishapriet Kaur கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மூவருக்கு ஆதரவாக Manoharan Malayalam ஆஜரானார்.

Seorang ahli keluarga Maniishapriet Kaur cuba menyerang tiga suspek kes bunuh pelajar Cyberjaya di perkarangan Mahkamah Sepang. Insiden mencetuskan kekecohan sebelum polis menenangkan keadaan dan peguam suspek memohon kawalan keselamatan tambahan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *