மனிஷா கொலை வழக்கில் காவல்துறை மீது வழக்கறிஞர் மனோகரன் ஆட்சேபம்!

- Sangeetha K Loganathan
- 03 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 3: மனிஷா கொலை வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாகக் கைது செய்யப்பட்டிருக்கும் மூவர் மீது ஆடவர் ஒருவர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்திருப்பதற்கு முக்கிய காரணம் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan என பிரபல வழக்கறிஞர் Manoharan Malayalam தெரிவித்தார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மூவரின் ஆதரவாக ஆஜராகியிருக்கும் Manoharan Malayalam, அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்க்கிறது, ஆனால் இன்னும் நிரூபிக்கபடவில்லை,. சட்டப்படி நிரூபிக்கப்படும் வரையில் அவர்கள் நிரபராதிகள் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்திருக்க வேண்டும் என வழக்கறிஞர் Manoharan Malayalam வலியுறுத்தினார்.
Cyberjaya பல்கலைக்கழக மாணவி Maniishapriet Kaur கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan வெளியிட்ட அறிக்கை இச்சம்பவத்திற்கு முக்கிய காரணம் என வழக்கறிஞர் Manoharan Malayalam தெரிவித்தார். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூவரையும் குற்றவாளிகள் என Datuk Hussein Omar Khan அடையாளப்படுத்தியிருப்பது நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மீறியிருக்கும் செயல் என வழக்கறிஞர் Manoharan Malayalam தெரிவித்தார். காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டால் மட்டும் போதுமானது. அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பதைத் தகுதியான நீதிபதிகள் பார்த்துக்கொள்வார்கள், காவல்துறை அனுமானத்தின் மூலமாகக் குறிப்பிட்டவர்களைக் குற்றவாளிகள் என அடையாளப்படுத்தியதால் இம்மாதிரியான செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் செயல்பட்டிருப்பதாக வழக்கறிஞர் Manoharan Malayalam தெரிவித்தார்.
Peguam terkenal Manoharan Malayalam membidas Ketua Polis Selangor Datuk Hussein Omar Khan kerana kenyataan awalnya yang didakwa melabel tiga suspek kes bunuh Maniishapriet Kaur sebagai bersalah. Tindakan ini didakwa punca cubaan serangan di mahkamah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *