இந்திய சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை இன்னும் தீவிரமாகக் கையாள வேண்டும்! -நூருல் இஸா அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 3: இந்திய சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை இன்னும் தீவிரமாகக் கையாள வேண்டும் என்று என்று பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்துள்ளார்.

13வது மலேசியத் திட்டத்தில் (13MP) இந்திய சமூகத்தை மேம்படுத்துவது குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாம் எவ்வளவு சத்தமாகப் பேசுகிறோம் என்பதல்ல, மாறாக நமது பணி மிகவும் தேவைப்படுபவர்களுக்கு மாற்றத்தைக் கொண்டுவருகிறதா என்பதுதான் மிக முக்கியம் என்று அவர் கூறினார்.

இந்திய சமூகம், குறிப்பாக B40 தரப்பினர்  எதிர்கொள்ளும் நீண்டகால சவால்களை மையமாகக் கொண்ட நிபுணர் தலைமையிலான ஒரு வட்ட மேசை அமர்வை ஏற்பாடு செய்ய கடந்த ஒரு வருடமாக ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

பள்ளிப் படிப்பை இடைநிறுத்துதல் விகிதங்கள், வறுமை, நாடற்ற தன்மை மற்றும் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உருவாக்குவதற்காக பொருளாதார வல்லுநர்கள், அரசு ஊழியர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் இதற்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளாதாக அவர் கூறினார்.

தேசிய பாலர் கல்விக் கொள்கை, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மையங்களை உருவாக்குதல், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் காப்பகம் மற்றும் வெளிப்படையான ஒருங்கிணைப்பு மற்றும் உதவிகளை வழங்குவதற்கான ஒரு சட்டப்பூர்வ நிறுவனம் ஆகியவை முக்கிய திட்டங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *