4 பில்லியன் மெகா ஊழல்! - நான் ஒரு காசுகூட எடுக்கவில்லை! - முகைதீன்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 6: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி விசாரணையில், 4 பில்லியன் ரிங்கிட் 1பெஸ்தாரிநெட் திட்டத்தில் தமக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மறுத்துள்ளார்.

 

நான் அல்லாஹ்விடம் சத்தியம் செய்கிறேன்... நான் 1 சென் கூட எடுக்கவில்லை என்று அவர் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

 

இந்தத் திட்ட முடிவை அப்போதைய பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்தான் எடுத்தார் என்றும், நான் அவரில்லை என்றும் முகைதீன் கூறினார்.

 

நஜிப் தான் முடிவெடுத்தார், அப்படியிருக்க என்னுடன் ஏன் இணைக்கிறார்கள்? நான் ஒப்பந்தத்தைக் கூட பார்க்கவில்லை, திட்டத்திற்கான எந்த ஒதுக்கீடும் நிதியமைச்சரால் வழங்கப்பட்டது  என்று அவர் மேற்கோள் காட்டினார்.

 

அவர்கள் இதை முன்பே விசாரித்தார்கள், ஆனால் அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை. தற்போது மீண்டும் பிரச்சினையாக மாறியுள்ளது. எம்ஏசிசி ஏன் விசாரிக்கிறது என்று  எனக்குத் தெரியாது என அவர் மேலும் கூறினார்.

 

கடந்த செப்டம்பர் 4 அன்று, MACC YTL கம்யூனிகேஷன்ஸ் Sdn Bhd இன் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. பின்னர்,  2011 இல் நஜிப்பின் நிர்வாகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட 1BestariNet திட்டத்தை மையமாகக் கொண்ட விசாரணையைத் தொடங்கியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *