KLIA 1-ல் முறையான ஆவணமின்றி நுழைந்த 64 அந்நிய நாட்டினர்!

- Muthu Kumar
- 15 May, 2025
கோலாலம்பூர், மே 15:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் ஒன்றில், தேவையான ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைய முயன்ற 64 வெளிநாட்டினரை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பினர் (AKPS) கண்டுபிடித்தனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 330 வெளிநாட்டினரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகத்திற்கிடமான அவர்களின் நடவடிக்கையை அதிகாரிகள் உணர்ந்து அவர்களைத் தடுத்தி நிறுத்தினர்.
இதில் 57 வங்கதேசிகள்,5 இந்தியர்கள் மற்றும் 2 பாகிஸ்தானியர்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிலர் அதிகாரிகளைத் தவறாக வழிநடத்த மோசடி தந்திரங்களைப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. இதில் தவறான ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் இல்லாத அல்லது புனையப்பட்ட விமான டிக்கெட்டுகள் போன்ற தவறான ஆவணங்களை காட்டியது அடங்கும் என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebanyak 64 warga asing, termasuk dari Bangladesh, India dan Pakistan, ditahan di KLIA kerana cuba masuk ke negara ini tanpa dokumen sah. Mereka dikesan menggunakan taktik penipuan seperti tempahan hotel palsu dan tiket penerbangan rekaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *