கல்லுடைப்பு நடவடிக்கையால் சுங்கை பூலோவில் 76 வீடுகள் சேதம்!

- Muthu Kumar
- 16 May, 2025
கோலாலம்பூர், மே 16-
கல்லுடைப்பு நடவடிக்கையினால் தெறித்த கற்களால் சுங்கை பூலோ, தாமான் மாத்தாங் ஜெயாவில் எழுபத்தாறு வீடுகள் சேதமடைந்துள்ளன. அருகில் உள்ள கல்லுடைப்புப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அச்சம்பவம் நிகழ்ந்தது.
வீட்டின் உரிமையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து சேதமுற்ற வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கான செலவுத்தொகையை ஏற்றுக் கொள்ள கல்லுடைப்பு நிறுவனத்தின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்தார் என்று குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சைட்ஃபுடின் அடாம் தெரிவித்தார்.
பிற்பகல் 3.15மணிக்கு அந்த வெடிப்பு நிகழ்ந்தது. முந்தைய வெடிப்புகளை விட இது கடுமையானதாக இருந்தது. அங்கிருந்து வெளியான சிதறல்கள் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பறந்து வீடுகளைத் தாக்கியுள்ளன.
சிதறல்கள் தாக்கியதில் பதின்மூன்று வீடுகளின் கூரைகள் கடுமையாகச் சேதமுற்றன. அறுபத்து மூன்று வீடுகளில் சுவர்கள், உட்கூரைகள், தரைப் பகுதிகள் பாதிக்கப்பட்டதோடு நீர்க்குழாய்கள் மற்றும் மின்சார சாதனங்களும் சேதமுற்றன என்று சைட்ஃபுடின் குறிப்பிட்டார். பல வீடுகளுக்குள் கூரை வழியாகவும் ஜன்னல் வழியாகவும் கற்கள் விழுந்துள்ளன.
இச்சம்பவத்தின்போது, ஜன்னல் வழியாக பறந்து வந்த சிறதல் தாக்கியதில் இருபது வயதான குடியிருப்புவாசி ஒருவர் லேசான காயங்களுக்கு ஆளானார் என்றும் அவர் கூறினார்.பாதிக்கப்பட்ட அப்பகுதியில் மொத்தம் 240தரைவீடுகள் உள்ளன.அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
Letupan kuari di Taman Matang Jaya, Sungai Buloh menyebabkan 76 rumah rosak. Batu beterbangan sejauh 1km, mencederakan seorang penduduk. Pemilik kuari bersetuju menanggung kos pembaikan. Sebanyak 240 rumah terletak di kawasan terjejas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *