ஈராக்கின் புனித நகரமான நஜாபில் உள்ள வாடி அல் சலாம் எனும் உலகின் மிகபெரிய கல்லறை!

top-news
FREE WEBSITE AD

உலகின் மிகப்பெரிய கல்லறை ஈராக்கின் புனித நகரமான நஜாபில் அமைந்துள்ளது. இங்கு ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கல்லறைக்கு வாடி அல் சலாம் என்று பெயர்.ஆங்கிலத்தில் "வேலி ஆப் பீஸ்" என்று அர்த்தம். இந்த கல்லறையில் பல்லாயிரக்கணக்கான தீர்க்கதரிசிகள், விஞ்ஞானிகள், அரச பரம்பரையினர் என்று அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



இந்தக் கல்லறையானது நகரின் நடுப்பகுதியில் இருந்து வட மேற்கு வரை நீண்டு கொண்டே போகிறது. நகரத்தின் மொத்த பரப்பளவில் இருந்து 13 சதவீதம் இந்த கல்லறை கொண்டுள்ளது. இந்த கல்லறையானது இடுக்கான கட்டிடங்கள் போன்று காட்சியளிக்கும். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் "வாடி அல் சலாம்" கல்லறையை காண வருகை தருகின்றனர்.

அல்ஹிராவின் அரசர்கள் அல் சசானியின் தலைவர்கள், சுல்தான்கள் மற்றும் மாநில அரசர்கள் என முக்கியமானவர்கள் இந்த வாடி அல் சலாம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த வாடி அல் சலாம் கல்லறைகளில் கீழ் கல்லறைகள், உயர்கல்லறைகள் என பல வகையான கல்லறைகள் காணப்படுகிறது.

முகமது நபியின் மருமகன் "இமாம் அலி இப்னு அபி தாலிஃப்" உட்பட மேலும் பல கல்லறைகள் கலாச்சார பாரம்பரியத்தின் தனித்துவத்துடன் உலகத்திற்கு சாட்சியாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஷியா முஸ்லிம்களுக்கு வாடி அல்சலாம் முக்கியமான ஓய்வு இடமாக கருதப்படுகிறது என அல்ஜசிரா தெரிவித்துள்ளது.

50,000 பேரின் உடல்கள் ஒவ்வொரு வருடமும் உலகின் மிகப்பெரிய கல்லறையான இங்கு அடக்கம் செய்யப்படுகிறது. ஒரு கல்லறை தோன்றுவதற்கு 100 அமெரிக்க டாலர்களும் கல்லறை கற்கள் அமைப்பதற்கு 170 முதல் 200 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும் என்று ஏ எஃப் பி செய்தி நிறுவனம் கூறுகிறது.
வாடி அல் சலாம் கல்லறை கிட்டத்தட்ட 1700 கால்பந்து மைதானங்களுக்கு சமமான நிலப்பரப்பாக கருதப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கல்லறையாகவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பினால் வாடி அல்சலாம் பாரம்பரிய சின்னமாக உலகிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *