நஜிப் - இர்வான் நிபந்தனையுடன் விடுதலை!
- Shan Siva
- 28 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 28: இண்டர்நேஷனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மண்ட்
கம்பெனி (ஐபிஐசி) சம்பந்தப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டிலிருந்து முன்னாள்
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கும், கருவூலத்துறையின்
முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் அப்துல்லாவும் நிபந்தனையுடன்
நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
தங்களை நிபந்தனையுடன்
விடுதலை செய்யக்கோரி அவர்கள் இருவரும் செய்துள்ள விண்ணப்பத்தை ஏற்று தமது விசேஷ
அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஜாமில்
உசேன் உத்தரவிட்டார்.
அபுதாபி
அரசாங்கத்திற்குச் சொந்தமான ஐபிஐசி நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய அரசாங்கப்
பணத்தை மோசடி செய்ததாக நஜிப் மற்றும் இர்வான் மீது கடந்த 2018ஆம் ஆண்டில் ஆறு குற்றங்கள் சுமத்தப்பட்டன.
அந்த
வழக்கிற்குத் தேவைப்படும் முக்கிய ஆவணங்களைத் தற்காப்புத் தரப்பினருக்கு
அரசுத் தரப்பினர் இன்னும் வழங்காமல் இருப்பதால் தங்களை விடுதலை செய்யும்படி
நஜிப்பும் இர்வானும். விண்ணப்பம் செய்திருந்தனர்.
குற்றவியல்
சட்டத்தின் 51ஏ பிரிவின்படி அந்த ஆவணங்கள். தற்காப்புத் தரப்பினரிடம்
சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசுத் தரப்பினர் அவ்வாறு செய்யவில்லை என்று ஜாமில்
சுட்டிக் காட்டினார்.
அவ்விருவர்
மீதும் 2018ஆம் ஆண்டில்
குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நாட்களும். தீர்மானிக்கப்பட்டன. ஆனால், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதுவோர்
அசாதாரணமான காலதாமதம் ஆகும் என்று அவர் கூறினார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள
நஜிப்பும். இர்வானும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படாமல் குற்றச்சாட்டிலிருந்து
மட்டுமே தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடத்த அரசுத் தரப்பினர்
தயாரானவுடன் அவர்கள் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்படும் என்று நீதிபதி
விளக்கினார்.
நஜிப் மற்றும்
இர்வானுக்காக செலுத்தப்பட்ட பிணையுறுதித்
தொகையை திரும்ப ஒப்படைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
அதிகாரத்துவ
ரகசியக் காப்புச் சட்டத்தின்கீழ் பல அமைச்சுகளில் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களைத்
தங்களால் பெறமுடியவில்லை என்று துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் சைஃபுடின் ஹஷிம்
முசாய்மி திங்கள்கிழமையன்று தெரிவித்திருந்தார்.
ஆறு ஆண்டுகளுக்கு
முன்பே நஜிப் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும் ஆவணங்கள்
சார்வுசெய்யப்படாமல் உள்ளன. இது நீதிக்குப் புறம்பான செயலாகும் என்றும், நஜிப்பின் ஷஃபி
அப்துல்லா நேற்று வாதிட்டார். தற்போதைய
நீதிபரிபாலன நடவடிக்கைகள் நஜிப்பை ஒடுக்கும் வகையில் இருப்பதால் அவரை
நிபந்தனையுடன் விடுவிப்பதுதான் முறையானதாக இருக்கும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.
இதனிடையே, இர்வானின் வழக்கறிஞர். கே. குமரேந்திரன் வாதிடுகையில், தங்களிடம் 21ஆவணங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் 59
ஆவணங்கள் ஒப்படைக்கப்படாமல் இருப்பதாகவும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *