முகைதீனின் மாமன்னரை இழிவுப்படுத்திய வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!
- Sangeetha K Loganathan
- 27 Nov, 2024
நவம்பர் 27
மாமன்னர் Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah மீது அவதூறு பரப்பியது தொடர்பாக முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin மீதான வழக்கு GUA MUSANG அமர்வு நீதிமன்றத்திலிருந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
முகைதீன் மீது தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அமர்வு நீதிமன்றத்திலிருந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கோத்தா பாரு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலின் பிரச்சார மேடையில் அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மை இருந்தும் மாமன்னர் தமக்கு அனுமதி மறுத்ததாகவும், அதனால் பெரிக்காத்தான் ஆட்சியைத் தம்மால் தக்க வைக்க முடியவில்லை என்றும் Tan Sri Muhyiddin Yassin குற்றம்சாட்டிய நிலையில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Mahkamah Tinggi Kota Bharu hari ini membenarkan permohonan bekas Perdana Menteri Tan Sri Muhyiddin Yassin untuk memindahkan perbicaraan kes yang dihadapinya di Mahkamah Sesyen Gua Musang ke Mahkamah Tinggi Kuala Lumpur.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *