மலேசிய கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன் காலமானார்!
- Shan Siva
- 28 Nov, 2024
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 28: மலேசிய கோடீஸ்வரரான டி ஆனந்த கிருஷ்ணன் தனது 86வது வயதில் இன்று காலமானார்.
ஆனந்தா
தலைமையிலான முதலீட்டு நிறுவனமான Usaha Tegas Sdn Bhd இன்று அவர் காலமானதை
உறுதிப்படுத்தியது.
தேசத்தைக்
கட்டியெழுப்புவதற்கும் கார்ப்பரேட் உலகிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச்
செய்துள்ளார்.
ஹோட்டல் மற்றும்
ரியல் எஸ்டேட் அதிபர் ராபர்ட் குவோக் மற்றும் ஹாங் லியோங்கின் க்யூக் லெங் சான்
ஆகியோருக்குப் பிறகு, 5.1 பில்லியன்
அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் மலேசியாவின் மூன்றாவது பணக்காரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்வர்ட்
பிசினஸ் ஸ்கூல் முன்னாள் மாணவரான ஆனந்தா மலேசியாவின் இரண்டாவது பெரிய மொபைல்
ஆபரேட்டரான Maxis Bhd ஐ நிறுவினார்,
அத்துடன் ஒளிபரப்பு மற்றும் ஊடக நிறுவனமான Astro
Malaysia Holdings Bhd நிறுவனத்தையும் நிறுவி முத்திரை பதித்தார் மேலும் பல்வேறு தனித்துவமான
பங்களிப்பில் மலேசியாவின் அடையாளமாகவும் அவர் மிளிர்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *