பள்ளி சிற்றுண்டி உணவு விலை ஏற்றம்! PIBG-உடன் கலந்துரையாடுங்கள்! – கல்வி அமைச்சர் உத்தரவு!
- Sangeetha K Loganathan
- 27 Nov, 2024
நவம்பர் 27,
பள்ளிகளில் செயல்பட்டு வரும் சிற்றுண்டிச்சாலைகள் தனியார் உணவகமல்ல என கல்வி அமைச்சர் Fadhlina Sidek நினைவுருத்தினார். விருப்பத்திற்கு விலையை அதிகரிக்க முடியாது என்றும் பள்ளி நிர்வாகத்தின் ஒப்பந்தக் குத்தகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் உணவுகள் விற்கப்படுவதைக் கல்வி அமைச்சு உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.
சில பள்ளிகளில் உணவுகளின் விலை ஏற்றம் கண்டுள்ளதாகக் கல்வி அமைச்சுக்குப் புகார்கள் பெறப்படுவதாகவும், சம்மந்தப்பட்ட பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் சுமுகமாகப் பேசி விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். விலையேற்றத்திற்கு முன்னமே பெற்றோர்களுடன் கலந்துரையாடியிருக்க வேண்டியது கட்டாயம் என அவர் நினைவுருத்தினார்.
சிற்றுண்டிச்சாலைகளில் விற்கப்படும் உணவுகளின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருப்பதைப் பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
Menteri Pendidikan, Fadhlina Sidek, mengarahkan sekolah memastikan harga makanan kantin dikawal dan sebarang kenaikan perlu dibincangkan dengan PIBG terlebih dahulu. Pengusaha kantin mesti mematuhi perjanjian tender yang ditandatangani.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *