ஒற்றுமை அரசிலிருந்து விலகினால் பிரதமர் பதவி! - ஸாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், நவம்பர் 25: ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு வெளியேறி, புதிய அரசாங்கத்தை அமைத்தால்‌, அதற்கு கைமாறாக பிரதமர்‌ பதவியையேகூட தருகிறோம்‌. என்று, தேசிய முன்னணியை ஒரு தரப்பு வற்புறுத்த முயன்றதாக, அதன்‌ தலைவர்‌ டத்தோஸ்ரீ அஹமட் ஸாஹிட் ஹமிடி அம்பலப்படுத்தியுள்ளார்.

அத்தகைய முயற்சியில்‌ எந்த தரப்பு ஈடுபட்டது என்பதை, துணைப்‌ பிரதமருமான ஸாஹிட்‌ வெளிப்படுத்தவில்லை.

“அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது உண்மை. நடப்பு அரசாங்கத்தை மாற்ற அவர்கள்‌ விரும்பினர்‌. அவ்வாறு செய்தால்‌, தேசிய முன்னணிக்கு பிரதமர்‌ பதவியை தரப்போவதாகவும்‌ வாக்குறுதி அளித்தனர்‌. 

“அதற்கு வாய்ப்பே இல்லை. உங்கள்‌ நேரத்தை வீணடிக்காதீர்கள்‌ என்று அவர்களிடம்‌ நான்‌ தெரிவித்து விட்டேன்‌. ஒற்றுமை அரசாங்கத்தை நாம்‌ தேசிய முன்னணி வலிமைப்படுத்த வேண்டும்‌” என்று, கோலாலம்பூரில்‌ நடந்த கூட்டரசுப் பிரதேச தேசிய முன்னணி மாநாட்டில்‌ உரையாற்றும்போது, அம்னோ தலைவருமான ஸாஹிட்‌ தெரிவித்தார்‌.

“எனது பதில்‌ தீர்க்கமானதாக இருந்தது. இதற்கு முன்னர்‌ எனக்கு துரோகம்‌ இழைக்கப்பட்டிருந்தாலும்‌ எனது நண்பர்களுக்கு நான்‌ துரோகம்‌ செய்ய மாட்டேன்‌. இதில்‌ நான்‌ உறுதியாகவும்‌ இருக்கின்றேன்‌ என்று அவர்‌ குறிப்பிட்டார்‌. 

கடந்த வாரத்தில்‌ தம்மை சந்திக்க வந்த சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌, ஒரு “புதிய ஒற்றுமை: அரசாங்கத்தை” அமைக்குமாறு தம்மை கேட்டுக்‌ கொண்டதாக ஸாஹிட்‌ அம்பலப்படுத்தினார்‌.  “அவ்வாறு செய்யும்‌ பட்சத்தில்‌ தங்களுக்கு கைமாறாக நான்கு அமைச்சரவை பதவிகளை வழங்குமாறு. அவர்கள்‌ கோரினர்‌. அவர்கள்‌ ஏன்‌ அவ்வாறு கேட்கின்றனர்‌?. காரணம்‌ அவர்கள்‌ ரத்தத்தை ருசி பார்த்திருக்கின்றனர்‌. அமைச்சர்களானால்‌ எப்படி இருக்கும்‌ என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்‌” என்று ஸாஹிட்‌ தெரிவித்தார்‌. 

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்‌ பலம்‌ குறைந்து கொண்டே வருகிறது என்பதை அவர்களின்‌ இத்தகைய செயல்‌ நிரூபிப்பதாகவும்‌ அவர்‌ தெரிவித்தார்‌.  “ஆதலால்‌, இங்கிருக்கும்‌ உங்கள்‌ அனைவரிடமும்‌ நான்‌ கேட்கின்றேன்‌. நாம்‌ போதுமான பலத்துடன்‌ இருக்கின்றோமா?: இன்னும்‌ இல்லை. எதிர்க்கட்சிகள்‌ பலமாக இருக்கின்றனவா” அவர்கள்‌ பலவீனமடைந்து வருகின்றனர்‌” என்று ஸாஹிட்‌ கூறினார்‌. 

மற்றவர்களைப்‌ பயன்படுத்தி முன்னேற வேண்டாம்‌ என்று தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த. ஸாஹிட்‌, “மற்றவர்களின்‌ முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காதீர்கள்‌. நாம்‌ அவ்வாறு செய்தால்‌, நாம்‌ அவமானத்துடன்‌ கீழே விழுந்துவிடுவோம்‌' என்று அறிவுறுத்தினார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *