மகாதீர் Vs அன்வார் - மத்தியஸ்தம் செய்துகொள்ள நீதிமன்றம் பரிந்துரை
- Shan Siva
- 19 Nov, 2024
ஷா ஆலம், நவம்பர் 19: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு
எதிராக டாக்டர் மகாதீர் முகமட் தொடுத்த வழக்கை, மத்தியஸ்தம்
செய்து தீர்வு காணுமாறு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இந்த விவகாரம்
இன்று விவாதத்திற்கு வந்தபோது நீதித்துறை ஆணையர் ஜஹாரா ஹுசைன் இதை முன்மொழிந்தார்.
இரு தரப்பு
சட்டக் குழுக்களும் முன்மொழியப்பட்ட மத்தியஸ்தம் குறித்து தங்கள் கட்சிக்காரர்களின்
அறிவுறுத்தல்களைப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கை
அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடத்த
நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடுத்த வழக்கு செவிமடுப்புக்கு
முன் தங்கள் விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு இரு தரப்பினருக்கும் ஜஹாரா
அறிவுறுத்தினார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, மார்ச் 18 ஆம் தேதி
நடந்த பிகேஆர் மாநாட்டில், அன்வார் பேசிய கருத்துக்கு அன்வார் மீது மகாதீர் வழக்குத்
தொடர்ந்தார், மகாதீர் ஓர்
இனவெறியர் என்று குறிப்பிட்டு, பதவியில்
இருந்தபோது மகாதீர் தனது குடும்பத்தை வளப்படுத்தியதாக அன்வார் தெரிவித்ததாகக் கூறப்படுவது
தொடர்பில் மகாதீர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த
குற்றச்சாட்டுகள் ஓர் அரசியல்வாதி மற்றும் முன்னாள் பிரதமர் என்ற தனது அந்தஸ்தை
சிதைத்துவிட்டதாக மகாதீர் குற்றம்சாட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *