இது வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி! - அன்வாருக்கு நன்றி!
- Shan Siva
- 07 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 11: மறைந்த சூலு சுல்தான் வாரிசுகள் எனக் கூறி மலேசியாவுக்கு எதிராகத் தனிநபர்கள் தாக்கல் செய்த வழக்கை, பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் முழுமையாக நிராகரித்துள்ளது என்று பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒஸ்மான் கூறினார்.
இந்தத் தீர்ப்பு
நாட்டிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று அவர் வர்ணித்தார்.
செயலிழந்து போன 19 ஆம் நூற்றாண்டு ஒப்பந்தம் தொடர்பான நீண்டகால
சர்ச்சையில், மலேசியாவின் நிலைப்பாட்டை இந்த முடிவு மேலும் உறுதிப்படுத்துகிறது
என்றும் அவர் கூறினார்.
இந்தத் தீர்ப்பு
சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த ஒரு முக்கியமான வெற்றியாகும். இது சர்ச்சைத்
தீர்வுக்கான மாற்று வடிவமாக சர்வதேச நடுவர் மன்றத்தின் புனிதத்தைப் பாதுகாக்க
உதவும் என்று அவர் கூறினார்.
மலேசியாவின்
நிலைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கான இந்தத் தொடர்ச்சியான முயற்சியில் தொடர்ந்து ஆதரவு
மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையளித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தாம்
நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.
வெளியுறவு
அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், தகவல் தொடர்பு
அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், சபா முதல்வர்
டத்தோஸ்ரீ ஹாஜி நூர், சபா மாநில அரசு,
அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் மற்றும் பிரான்சில்
உள்ள மலேசியத் தூதரகம் ஆகியோர் மலேசியாவின் நலன்களைப் பாதுகாப்பதில் அயராத
முயற்சிகளை மேற்கொண்டதற்காக அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *