2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் 87 ஆயிரம் பேர் மரணமடைவார்கள்!- மிரட்டும் SUPERBUG
- Shan Siva
- 20 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 20: வரும் 2030 ஆம் ஆண்டுக்கள் “சூப்பர்பக் ' எனப்படும் ஏஎம்ஆர் நோய்க் கிருமிகளால் நாட்டில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட் தெரிவித்தார்.
இந்தக் கணிப்பை
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது என்று தெரிவித்த அவர், இந்த மிரட்டலை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டியது இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.
உலக சுகாதார
நிறுவனத்தின் இக்கணிப்பு ஆசியான் நாடுகள் உட்பட மேற்கு பசிபிக் வட்டார நாடுகளை
மையப்படுத்தியுள்ளது. உதாரணமாக, மூன்று கோடியே
முப்பது லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட மலேசியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் ஏஎம்ஆர் தொற்றினால் 87 ஆயிரம் பேர்
மரணமடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஸுல்கிப்ளி தெரிவித்தார்.
அதே
காலகட்டத்தில், 9 கோடியே 80
லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட வியட்னாமில் 296,581 பேர் உயிரிழப்பார்கள்
என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக புத்ராஜெயாவில் நேற்று ஏஎம்ஆர் விழிப்புணர்வு
வாரத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு பசிபிக்
வட்டாரத்தைப் பொறுத்தமட்டில் அத்தொற்றினால் 52 லட்சம் பேர் மரணமடைவார்கள்.
அந்நோய்த்தொற்று மரணத்தை மட்டும் ஏற்படுத்தாது. மாறாக, நாட்டின் கால்நடைகளுக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பையும்
ஏற்படுத்தும். அந்நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம்
அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *