ஓம்ஸ் அறவாரியத்தின் தங்க விருதுகள்! UM-மில் 30 பேருக்கு இன்று தங்கப் பதக்கம் வழங்குகிறார் ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்‌, டிச.1-  மலேசியாவின்‌ முதன்மை பல்கலைக்கழகமான மலாயாப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இந்திய ஆய்வியல்‌ துறையில்‌ இளங்கலை, முதுகலை, முனைவர்‌ பட்டம்‌ பெற்ற மாணவர்களுக்கு ஓம்ஸ்‌ அறவாரியம்‌ தங்கப்பதக்கம்‌ வழங்கி கெளரவப்படுத்தவிருக்கிறது.

இன்று டிசம்பர்‌ 1 மலாயாப்‌ பல்கலைக்கழகத்தில்‌ மாலை 6 மணிக்கு விரிவுரை மண்டபம் Dewan Kuliah F கலை, சமூக அறிவியல்‌ புலத்தில்‌, ஓம்ஸ்‌ அறவாரியத்தின்‌ தோற்றுநர்‌ ஓம்ஸ்‌.பா.தியாகராஜன்‌ தலைமையில்‌ தங்கப்‌ பதக்கம்‌ வழங்கும்‌ விழா நடைபெறவிருக்கிறது. 

கடந்த 2007 ஆம்‌ ஆண்டு முதல்‌ ஒவ்வோர்‌ ஆண்டும்‌ 3.5 மதிப்பீட்டுக்கு மேல்‌ பெற்ற மாணவர்களுக்கு ஓம்ஸ்‌ அறவாரியம்‌ தங்கப்பதக்கம்‌ வழங்கி கெளரவப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு மலாயாப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இந்திய ஆய்வியல்‌ துறையைச்‌ சேர்ந்த மொத்தம்‌ 30 மாணவர்கள்‌ தங்கப்பதக்கம்‌ பெறவிருக்கிறார்கள்‌. 5 முனைவர்‌ பட்ட மாணவர்களும்‌, 8 முதுகலை பட்ட மாணவர்களும்‌, 17 இளங்கலை பட்ட மாணவர்களும்‌ சிறப்புத்‌ தேர்ச்சிப்‌ பெற்று தங்கம்‌. பெறவிருக்கின்றனர்‌. 

ஓம்ஸ்‌ அறவாரியத்தின்‌ தோற்றுநர்‌ ஓம்ஸ்‌.பா.தியாகராஜன்‌. கோ. சாரங்கபாணி. அறவாரியத்தின்‌ தலைவரும்‌, சுகாதாரத்‌ துறை மேனாள்‌ துணை அமைச்சருமான தான்‌ ஸ்ரீ குமரன்‌, மலாயாப்‌ பல்கலைக்கழக கலை, சமூக அறிவியல்‌ புலத்தின்‌ தலைவர்‌ பேராசிரியர்‌ டத்தோ முனைவர்‌ டேனி வோங்‌ ட்ஸே கென்‌, தொழிலதிபர்‌ முத்துவேல்‌, இந்திய ஆய்வியல்‌ துறையின்தலைவர்‌ முனைவர்‌ கோவி. சிவபாலன்‌ ஆகியோர்‌ தங்கப்பதக்க விருது விழாவில்‌ பங்கேற்கிறார்கள்.

மலேசிய இந்தியர்களின்‌ கல்விக்கு முத்தாய்ப்பாகத்‌ திகழும்‌ மலாயாப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இந்திய ஆய்வியல்‌ துறையின்‌ அனைத்து இளங்கலை: மாணவர்களும்‌ கடந்த ஆண்டும்‌ இந்த ஆண்டும்‌ சிறப்புத்‌ தேர்ச்சியடைந்து தங்கப்பதக்கம்‌ பெறும்‌ தகுதியைப்‌ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007 ஆம்‌ ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத்‌ தங்கப்பதக்கம்‌ வழங்கும்‌ விழா தொடர்ந்து 2024 ஆம்‌ ஆண்டு வரையில்‌ நடைவற்று வருகிறது.

2007 ஆம்‌ ஆண்டு இந்திய ஆய்வியல்‌ துறையின்‌ இணைப்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ குமரன்‌ சுப்ரமணியம்‌ அவர்களால்‌ இந்திய ஆய்வியல்‌ துறை மாணவர்களைக்‌ கெளரவப்படுத்தும்‌ நோக்கத்தில்‌ ஓம்ஸ்‌.பா.தியாகராஜன்‌ அவர்களிடம்‌ தங்கப்பதக்க விருது திட்டம்‌ கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்ற ஓம்ஸ்‌.பா.தியாகராஜன்‌ அவர்கள்‌ தங்கப்பதக்கம்‌ வழங்கி மாணவர்களைச்‌ சிறப்பிக்கவும்‌ முழு மனதுடன்‌ ஒப்புக்‌ கொண்டதை அடுத்து. 2007 ஆம்‌ ஆண்டு இளங்கலை மாணவர்களுக்குத்‌ தங்கப்பதக்கம்‌ முதல்‌ முறையாக வழங்கப்பட்டது.

அதனையடுத்து 2010 ஆம்‌ ஆண்டு இளங்கலை. மாணவர்களுடன்‌ முதுகலை, முனைவர்‌ பட்டம்‌ பெறுபவர்களையும்‌ அங்கீகரிக்க. வேண்டுமெனும்‌ எண்ணம்‌ ஓம்ஸ்‌.பா.தியாகராஜன்‌ அவர்களிடம்‌ முன்வைக்கப்பட்ட போது. அதனைப்‌ பெருந்தன்மையுடன்‌ ஏற்று இன்று வரையில்‌ ஒவ்வோர்‌ ஆண்டும்‌. தொடர்ச்சியாகத்‌ தங்கப்‌ பதக்கங்கள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. 

கடந்த 2007 முதல்‌ இதுவரை தங்கப்பதக்கம்‌ பெற்றவர்களின்‌ மொத்த எண்ணிக்கை 228. இந்த 2024 ஆம்‌ ஆண்டு 3௦ மாணவர்கள்‌ தங்கப்பதக்கம்‌ பெறும்‌ நிலையில்‌ இதுவரை மொத்தம்‌ 258 மாணவர்கள்‌ தங்கப்பதக்கங்களைப்‌ பெறவுள்ளனர்‌. இந்திய ஆய்வியல்‌ துறையில்‌ செயல்பட்டு வரும்‌ இந்திய ஆய்வியல்‌ கழகத்தின்‌ மாணவர்கள்‌ தங்கப்பதக்க விருது நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்துள்ளனர்‌.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *