இஸ்லாமியக் கொள்கைகள் நாட்டின் தலைமையை வழிநடத்த வேண்டும்! - ஹாடி அவாங்

- Shan Siva
- 19 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 19: பிரதமரின் பதவிக் காலத்தை மட்டுப்படுத்த
வேண்டும் என்ற டிஏபியின் அழைப்பை பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங்
நிராகரித்தார், இந்த திட்டம்
கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது என்று அவர்
கூறினார்.
இந்த யோசனையை
ஏற்றுக்கொண்ட பலர் இந்த உலகத்திலும் மறுமையிலும் வெற்றியை அடைவதற்கு அவசியமான
அடிப்படைக் கொள்கைகளை மறந்துவிட்டார்கள் என்று ஹாடி கூறினார் - இஸ்லாமியக்
கொள்கைகள் நாட்டின் தலைமையை வழிநடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தலைமை என்பது
அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு புனிதமான நம்பிக்கை. தனிப்பட்ட லாபத்திற்காக
அடுத்தவரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு தனிநபர்கள் அனுபவிக்கும் ஒரு தற்காலிக
நிலைப்பாடு மட்டுமல்ல என்று அவர் ஒரு முகநூல்
பதிவில் தெரிவித்துள்ளார்..
கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணீ லோக், பிரதமர் பதவிக்கு இரண்டு தவணை மட்டுமே பதவிக்கால வரம்பை
சேர்க்க கூட்டரசு அரசியலமைப்பை அரசாங்கம் திருத்த வேண்டும் என்று தனது கட்சி
விரும்புவதாகக் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இந்த திட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள வேளையில், அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து தேவை என்று கூறினார்.
இந்நிலையில் ஹாடி இவ்வாறு கருத்துரைத்தார்.
மேலும், தீர்க்கதரிசிகள் வகுத்த பாதையிலிருந்து மிகப்பெரிய விலகல் என்பது, முஸ்லிம்கள்
முஸ்லிம் அல்லாதவர்களால் பாதிக்கப்பட அனுமதிக்கும்போதுதான் என்று ஹாடி
எச்சரித்தார்.
வரலாறு முழுவதும், இஸ்லாமிய கலீஃபாக்கள் தங்கள் கடைசி மூச்சு வரை பணியாற்றி, தங்கள் கடமையை உறுதியான அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியுள்ளனர் என்றும் மராங் எம்.பி.யுமான அவர் மேலும் கூறினார்.
PAS Presiden, Abdul Hadi Awang menolak cadangan DAP untuk mengehadkan tempoh jawatan Perdana Menteri, menyatakan ia bertentangan dengan kehendak Tuhan. Beliau menegaskan kepimpinan negara harus berpandukan prinsip Islam dan hanya diurus oleh individu yang memenuhi kelayakan agama.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *