மலாய் மொழி தெரியவில்லையா? அப்படியானால் சீனாவுக்குப் போ... ஆசிரியரின் திமிர்ப் பேச்சு!

- Shan Siva
- 22 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 22: மலாய் மொழியைப் பேசுவதில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ஓர் இடைநிலைப் பள்ளி மாணவனை "சீனாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறியதாக ஒரு ஆசிரியர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் ஆடியோ கிளிப் வைரலானதை அடுத்து, கல்வி அமைச்சு உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கல்விச்
சூழலுக்குள் எந்த வகையான இன அறிக்கைகள் அல்லது செயல்களையும் பொறுத்துக்கொள்ள
முடியாது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முழுமையான
உள் விசாரணை நடந்து வருகிறது என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் எஃப்எம்டியிடம்
தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட
மாணவரின் பெற்றோருடன் ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு
தெரிவித்துள்ளது.
அரசு கல்வி
நிறுவனங்கள் மாணவர்களின் பல்வேறு இன, மத மற்றும் கலாச்சார
பின்னணியை பாதுகாப்பாகவும், மதிக்கத்தக்கதாகவும் வைத்திருக்க இவேண்டும்
என்று அமைச்சு வலியுறுத்தியது.
சம்பந்தப்பட்ட ஒலி
பதிவில் மாணவரின் உறவினர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர், மாணவரிடம் "சீனாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று சொன்னீர்களா
என்று கேட்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர் அதனை
ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆசிரியை அந்த மாணவனை
"முட்டாள்" என்று அழைத்து, "குப்பைத்
தொட்டியின் அருகில் உட்காரச்" சொன்னதாகக் கூறப்படுகிறது.
மாணவனின் பெற்றோரால் கூட மலாய் மொழியில் பேச முடியாவிட்டால் அது ஒரு பெரிய பிரச்சனை என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது!
Kementerian Pendidikan sedang menyiasat dakwaan seorang guru mengeluarkan kenyataan berbaur perkauman kepada pelajar yang sukar berbahasa Melayu. Dalam rakaman audio tular, guru itu didakwa menyuruh pelajar "pulang ke China" dan menggunakan kata-kata kesat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *