புதன் : 9 ஏப்ரல், 2025
3 : 32 : 49 PM
முக்கிய செய்தி

111 பேர் இன்னும் மருத்துவமனைகளில்... 13 பேர் ஆபத்தான நிலையில்! - புத்ரா ஹைட்ஸ் தீவிபத்து தொடரும் சோகம்

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், ஏப்ரல் 2: நேற்று நிகழ்ந்த ஜாலான் புத்ரா ஹார்மோனி, புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் மொத்தம் 111 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கையில், 55 பேர் மஞ்சள் மண்டலத்திலும், 43 பேர் பச்சை மண்டலத்திலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மமாட் தெரிவித்தார்.

 எழுபத்தைந்து பேர் சுல்தான் இட்ரிஸ் ஷா செர்டாங் மருத்துவமனை மற்றும் சைபர்ஜெயா மருத்துவமனையிலும், 36 பேர் கோலாலம்பூர் மருத்துவமனை மற்றும் சுங்கை பூலோ மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் இன்று சுபாங்கில் உள்ள சம்பவக் கட்டுப்பாட்டு மையத்தில் (PKTK) செய்தியாளர்களிடம் கூறினார்.

Seramai 111 mangsa kebakaran paip gas di Putra Heights masih dirawat di hospital, dengan 13 dalam keadaan kritikal. 55 orang berada dalam zon kuning dan 43 dalam zon hijau. Mangsa menerima rawatan di Hospital Serdang, Hospital Cyberjaya, dan hospital lain sekitar Kuala Lumpur.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *