DAP 'ஆமாம் சாமி' போடும் கட்சி அல்ல! - லிம் குவான் எங்

- Shan Siva
- 16 Mar, 2025
ஷா ஆலம், மார்ச் 16: டிஏபி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக
இருக்கும்போது எந்தத் தரப்பினருக்கும் ஆமாம் சாமி போடும் கடசியாக இருக்காது என்று
லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். கட்சியின் விசுவாசம் அதன் வாக்காளர்களிடமும்
தேசத்திடமும் உள்ளது என்று கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிமுக்கு கட்சியின் தொடர்ச்சியான விசுவாசத்தையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அன்வார் பிரதமராவதற்கு
உதவுவதில் தங்களின் பங்கும் உண்டு என்பதில் தாங்கள் பெருமைப்படுவதாகவும், தொடர்ந்து அவரை ஆதரிப்போம் என்றும் இன்று டிஏபியின் 18வது
தேசிய மாநாட்டில் லிம் கூறினார்.
இருப்பினும்,
டிஏபி அர்சாங்கத்தில் ஆமாம் சாமி கட்சி
அல்ல என்பதை தாம் வலியுறுத்த
விரும்புவதாக அவர் தெரிவித்தார். டிஏபி வாக்காளர்களுக்கும் மலேசிய மக்களுக்கும் மட்டுமே
ஆமாம் சாமியாக இருப்போம் என்று அவர் கூறினார்.
பக்காத்தான்
ஹராப்பான் (PH) கட்சி
உருவானதிலிருந்து DAP மற்றும்
அன்வாரின் கட்சியான PKR கட்சிகள் அரசியல்
பங்காளிகளாக இருந்து வருகின்றன.
2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு (GE15) தொங்கு நாடாளுமன்றம் உருவானதைத் தொடர்ந்து, DAP இப்போது அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது!
Lim Guan Eng menegaskan bahawa DAP bukanlah parti yang sekadar mengiyakan segala keputusan kerajaan, walaupun ia sebahagian daripada kerajaan perpaduan. Beliau menekankan kesetiaan parti itu kepada pengundi dan negara serta menegaskan sokongan berterusan kepada Perdana Menteri Anwar Ibrahim.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *