66 வயது தனது தாயின் காதலருக்கு RM 140,000 செலுத்திய மகன்! ‘LOVE SCAM’ மோசடியில் பணத்தை இழந்த பரிதாபம்

- Shan Siva
- 29 Mar, 2025
கூலாய், மார்ச் 29: தனது தாயாரின் மகிழ்ச்சிக்காக 34 வயதான ஒரு நிறுவன இயக்குனர், தனது தாயார் ஒரு சமூக செய்தி செயலி மூலம் "சந்தித்த" ஓர் அழகான அந்நியரை திருமணம் செய்து கொள்வதற்காக RM140,000 க்கும் அதிகமான பணத்தை செலவழித்தார்.
ஆனால், நிதியைப் பெற்ற பிறகு மணமகன் மாயமாகிப் போனதால், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸில் புகாரளித்துள்ளார்.
இது ஒரு லவ் ஸ்கேம் என்று கூலாய் மாவட்ட காவல்துறை தலைவர் டான் செங் லீ தெரிவித்தார்.
66 வயதான தாய், சீனாவைச் சேர்ந்த ஒரு ஆண் என்று நம்பப்படும் அந்நியருடன்
வாட்ஸ்அப் மூலம் உரையாடிய பிறகு இது தொடங்கியதாக அவர் கூறினார்.
வியாழக்கிழமை
(மார்ச் 27), அந்தப் பெண் தனது
மகனிடம் தனது காதலருக்குப் பணத்தை மாற்றச் சொன்னார். அவர் தன்னை திருமணம்
செய்து கொள்ள மலேசியாவுக்கு வருவதாக உறுதியளித்ததன் அடிப்படையி பணமும் பரிவர்த்தனை
செய்யப்பட்டது.
அந்த நபர் தனது
தாயைத் திருமணம் செய்து கொள்ள இங்கு வந்தவுடன் அவருக்குத் திருப்பித் தருவார்
என்று கூறப்பட்டதால், மகன் ஒரே
பரிவர்த்தனையில் மொத்தம் RM147,213 ஐ
உள்ளூர் வங்கிக் கணக்கில் அதே நாளில் செலுத்தியதாக டான் செங் லீ ஒரு அறிக்கையில்
தெரிவித்தார்.
இதனை அடுத்து காதல் அல்லது வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும என்று ACP டான் செங் லீ கூறினார்!
Seorang pengarah syarikat berusia 34 tahun di Kulai kehilangan lebih RM140,000 selepas ibunya ditipu dalam penipuan cinta oleh seorang lelaki asing yang dikenalinya melalui WhatsApp. Setelah menerima wang tersebut, lelaki itu menghilang, menyebabkan mangsa membuat laporan polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *