சுபாங்‌ ஜெயா வட்டாரத்தில்‌ RM 1 கோடியே 66 லட்சம்‌ மதிப்புள்ள போதைப்பொருட்கள்‌ சிக்கின!

top-news

(இரா.கோபி)

கோலாலம்பூர்‌, ஏப்‌ரல் 4: புக்கிட்‌ அமான்‌ போதைப்பொருள்‌ குற்றப்புலனாய்வுத்‌ துறை. சுபாங்‌ ஜெயா வட்டாரத்தில்‌ நடத்திய சோதனையில்‌ 1 கோடியே 66 லட்சத்து 8 ஆயிரம்‌ வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டன என்று புக்கிட்‌ அமான்‌ போதைப்பொருள்‌ குற்றப்பிரிவுத்‌ துறையின்‌ இடைக்கால இயக்குநர்‌ டிசிபி மாட் ஸானி முகமட்‌ சலாவுடின்‌ சே அலி தெரிவித்தார்‌.

கடந்த மாதம்‌ 27ஆம்‌ தேதி காலை 7 மணியளவில்‌ புக்கிட்‌ அமான்‌ போலீஸார்‌ சுபாங்‌ ஜெயா பகுதியில்‌ ஒரு புரோட்டோன்‌ சாகா காரில்‌ சோதனை செய்ததில்‌, அக்காரிலிருந்து 2 மூட்டைகளில்‌. 100 பொட்டலங்கள்‌ கொண்ட மெத்தமின்‌ போதைப்பொருட்கள்‌ கண்டெடுக்கப்பட்டன.

மேலும்‌ அக்காரின் பின்பகுதியில் ‌2 மூட்டைகளில்  ‌50 பொட்டலங்களில்‌ மெத்தமின்‌ கண்டெடுக்கப்பட்டது. மொத்தம்‌150 பொட்டலங்களான அவற்றின் எடை 156 கிலோகிராம்‌ என்று அவர்‌ தெரிவித்தார்‌.

காரை ஓட்டிவந்த சீன ஆடவர்களை விசாரணைக்காக போலீஸார்‌ கைது செய்தனர்‌. அவர்கள்‌ 21 முதல்‌ 32 வயதுடையவர்கள்‌ ஆவர்‌.

அதன்‌ பிறகு கைது செய்யப்பட்டவர்களிடம்‌ விசாரணை மேற்கொண்டதில்‌ சுபாங்‌ ஜெயாவில்‌ உள்ள ஒரு வீட்டில்‌ சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வீட்டிலிருந்து 12 மூட்டைகளில்‌, 300 பொட்டலங்களில்‌ மெத்தமின்‌ போதைப்பொருட்கள்‌ கண்டெடுக்கப்பட்டன. அதன்‌ எடை 312 கிலோகிராம்‌ என்றார்‌ அவர்‌.

மேலும்‌ அம்பாங்‌ தாமான்‌ புக்கிட்‌ பெர்மாயில்‌ கிடங்கு ஒன்றில்‌ சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்‌ 2 மூட்டைகளில்‌ 50 பொட்டலங்கள்‌ மெத்தமின்‌ கண்டெடுக்கப்பட்டது. அதன்‌ எடை 51 கிலோகிராம்‌.

பறிமுதல்‌ செய்யப்பட்ட போதைப்பொருட்களின்‌ மொத்த எடை 519 கிலோகிராம்‌. அதன்‌ மதிப்பு 1 கோடியே 66 லட்சத்து 8 ஆயிரம்‌ வெள்ளி என அவர்‌ கூறினார்‌.

பறிமுதல்‌ செய்யப்பட்ட போதைப்பொருட்கள்‌ கிட்டத்தட்ட 26 லட்சம்‌பேர்‌ உபயோகிக்கக்கூடியதாகும்‌ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக்‌ கும்பல்‌ கடந்தாண்டு செப்டம்பர்‌ முதல்‌ கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில்‌ போதைப்பொருள்‌ விநியோகத்தில்‌ ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில்,வர்கள்‌ அனைவரும்‌14 நாட்கள்‌ விசாரணைக்காக செக்சன்‌ 39 (B) பிரிவின்‌ கீழ்‌ தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்‌. குற்றம்‌ நிரூபிக்கப்பட்டால்‌, சாகும்வரை  தூக்குத்‌ தண்டனை அல்லது ஆயுள்‌ தண்டனை மற்றும் 12 பிரம்படிகள்‌ வழங்கும்‌ வகையில்‌ சட்டம்‌ உள்ளதாக அவர்‌ கூறினார்‌.

நாட்டில் பல மாநிலங்களில்‌ போதைப்பொருள்‌ கூடாரங்களாக இயங்கி வரும் கேளிக்கை மையங்களை போலீஸார்‌ கண்டுபிடித்துள்ளனர்‌.   எந்த நேரத்திலும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என அவர்‌ எச்சரித்தார்‌!

Polis Bukit Aman merampas dadah methamphetamine seberat 519kg bernilai RM16.6 juta di Subang Jaya dan Ampang. Empat lelaki Cina berusia 21–32 tahun ditahan. Dadah tersebut mampu menjejaskan 2.6 juta pengguna. Suspek disiasat di bawah Seksyen 39B dan berdepan hukuman mati atau penjara seumur hidup.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *