ஜம்ரியை 2 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

- Shan Siva
- 28 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 28: கோலாலம்பூரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன்
கோயிலை இடமாற்றம் செய்வது தொடர்பாக முகநூலில் சர்ச்சையான கருத்துகளைக் கூறியதாகக் கிடைக்கப்பெற்ற
புகாரின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜம்ரி வினோத் கைது செய்யப்பட்டுள்ள
நிலையில், அவரை இரண்டு நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
பெர்லிஸில் உள்ள
கங்கார் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை மாஜிஸ்திரேட் அனா ரோசானா முகமது நோர் இந்த
ரிமாண்ட் உத்தரவை பிறப்பித்ததாக, தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன்
தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு 1948
தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 4(1) மற்றும் 1998 தகவல் தொடர்பு மற்றும்
மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர்
கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்தாரர்
ஜம்ரி மீது தேசத்துரோகச் செயல் மற்றும் இந்து நம்பிக்கையின் நற்பெயருக்கு களங்கம்
விளைவித்ததாக குற்றம் சாட்டியதாக ரசாருதீன் கூறினார்.
இந்துக்களின் புனித சடங்குகளில் ஒன்றான காவடி ஆட்டத்தை பேய்களின் ஆட்டம் என இழிவாகச் சித்தரித்து பதிவு போட்டிருந்தார். இந்நிலையில் இப்போது பத்ரகாளியம்மன் கோயில் விவகாரத்தை சர்ச்சையாக்கி குளிர்காய நினைக்கிறார். இவர்களைப் போன்றோருக்கு கடும் தண்டனை வழங்கினால்தான் தேசம் நலமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்!
Zamri Vinoth ditahan kerana kenyataannya di Facebook mengenai pemindahan Kuil Devi Sri Badrakaliamman. Mahkamah mengarahkannya direman dua hari. Kes disiasat di bawah Akta Hasutan 1948 dan Akta Komunikasi 1998. Polis menerima aduan berkaitan penghinaan kepercayaan Hindu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *