குழந்தைகளை அச்சுறுத்தும் HFMD – பெற்றோர்கள் கவனம்

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், மார்ச் 28: இந்த ஆண்டு பினாங்கில் கை, கால் மற்றும் வாய் சம்பந்தப்பட்ட HFMD நோய் சம்பவங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட ஜனவரி 1 முதல் மார்ச் 22 வரை 409% அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 3,446 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் வெறும் 677 சம்பவங்களாகவே பதிவாகியது என்று மாநில சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் தெரிவித்தார்.

இந்த நோய் கைகள், கால்கள், வாய் மற்றும் நாக்கில் கொப்புளங்களை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் குழந்தைகள் மத்தியில் பரவும் இவ்வகை நோய்கள் நுரையீரல், மூளை மற்றும் இதய தொற்றுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

பினாங்கில் ஏற்கனவே இதுபோன்ற ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட நோயாளி குணமடைந்துள்ளார்.

எனவே, இது தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் குழந்தைகளின் கைகளை அடிக்கடி கழுவுவதை உறுதி செய்யவும், எல்லா நேரங்களிலும் நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்கவும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பெற்றோர்கள் தொற்றுகள் குறித்து உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு எச்சரிக்க வேண்டும். இந்த தொற்றுநோயை விரைவாகக் கட்டுப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் நமக்குத் தேவை. முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சுகாதார நடைமுறைகள் முக்கியம், என்று அவர் கொம்தாரில் செய்தியாளர்களிடம் கூறினார்!

Kes HFMD di Pulau Pinang meningkat 409% berbanding tahun lalu, dengan 3,446 kes setakat 22 Mac. Penyakit ini menyerang tangan, kaki, dan mulut, terutama kanak-kanak. Ibu bapa dinasihatkan menjaga kebersihan dan melaporkan kes kepada pihak berkuasa kesihatan segera.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *