சொந்த சமூகங்களின் ஹீரோவாக இருக்காதீர்கள்! - மஸ்ஜிட் மடானி அடிக்கல் நாட்டு விழாவில் அன்வார்

- Shan Siva
- 27 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 27: தலைநகரின் நடுவில் Masjid Madani கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள வெற்றிகரமான தீர்வு, தற்பெருமை கொள்ள வேண்டிய ஒன்றல்ல. அமைதியைக் காக்க நமது
இஸ்லாமிய விழுமியங்களின் பிரதிபலிப்பு அது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் தெரிவித்தார்.
மஸ்ஜிட் மடானி
கட்டுவதற்கு வழி வகுக்கும் வகையில் இந்து கோவிலை இடமாற்றம் செய்வது
ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்யப்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று
தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட
தரப்பினரால் சமரசங்கள் செய்யப்பட்டன என்றும் அன்வார் கூறினார்.
ஒரு இணக்கமான பேச்சுவார்த்தை
நடத்த தனது அமைச்சரவைக்கு தாம் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.
அதேவேளை மசூதி கட்டப்படும்
முடிவிலும் பின்வாங்கவில்லை என்று கூறினார்.
ஜேக்கெல் குழுமத்தின்
திட்டமான மஸ்ஜித் மடானியின் அடிக்கல் நாட்டு விழாவில் அன்வர் அன்வார் இவ்வாறு
கூறினார்.
சுமார் 12,000
சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மசூதி இரண்டு மாடிகளைக் கொண்ட நவீன வடிவமைப்பில்
இருக்கும் என்று அவர் கூறினார்.
நகரங்களில்
தொடங்கி பல்வேறு சமூகங்களான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களால்
ஏற்றுக்கொள்ளப்படும் "நாகரிகம்" என்ற வார்த்தையால் மசூதிக்கு மடானி என்ற
பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்து சமூகத்தை
புண்படுத்தாமல் கோயில் தொடர்பான விஷயத்தை அமைதியாக தீர்த்துக் கொண்டதற்காக
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அன்வார் நன்றி
தெரிவித்தார்.
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த சமூகங்களின் ஹீரோவாக இருப்பது நாட்டை அழித்துவிடும். நாம் மலேசியத் தலைவர்களாக இருக்க வேண்டும்.
இதனிடையே மடானி மஸ்ஜிட் அடிக்கல் நாட்டு விழாவில் இன்று பேசிய ஜேக்கெல்
குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ முகமது ஃபரோஸ் முகமது ஜேக்கேல் மசூதி தனது
மறைந்த தந்தையின் கனவு என்று கூறினார்.
ஜேக்கெல் சகோதரர்கள்
தங்கள் மறைந்த தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருந்ததாகவும்,
அவர்களின் நிலத்தில் உள்ள கோயிலை
சட்டப்பூர்வமாக வெளியேற்ற விரும்பியதாகவும் அவர் கூறினார்.
11 ஆண்டுகளாக
காத்திருந்தோம். 2021 ஆம் ஆண்டில் கட்டிடத் திட்டங்களுக்கு நாங்கள் ஒப்புதல்
பெற்றோம்.
இருப்பினும்,
கூட்டர்சுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ சாலிஹா
முஸ்தபா, கோயிலுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எங்களுக்கு அறிவுறுத்தினார்.
24 மாதங்களில்
கட்டி முடிக்கப்படும் இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த மஸ்ஜிட் மடானியில் 1,100 பேர்
கலந்து கொள்ளலாம் என்றும், நூலகம் மற்றும்
சமூக மண்டபம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப், மத அமைச்சர் டத்தோ டாக்டர் முகமது நயிம் மொக்தார், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஜலிஹா, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், தோட்டக்கலை மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கானி, சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Perdana Menteri Anwar Ibrahim menegaskan pembinaan Masjid Madani mencerminkan keharmonian Islam. Perpindahan kuil dilakukan secara teratur dengan persetujuan bersama. Masjid seluas 12,000 kaki persegi ini akan siap dalam 24 bulan, menampung 1,100 jemaah serta dilengkapi perpustakaan dan dewan komuniti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *