யார் உங்கள் கட்சியில் பிரதமர் வேட்பாளர்? பெரிக்காத்தானுக்கு PKR கட்சியிலிருந்து சவால்!

- Shan Siva
- 26 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 26: அடுத்த பொதுத் தேர்தலுக்கான (GE16) பிரதமர் வேட்பாளரை அறிவிக்குமாறு
பெரிகாத்தான் நேஷனல் (PN) கட்சிக்கு PKR
தலைவர் ஒருவர் சவால் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி ஒப்பந்தத்தில் "பல தகுதியான வேட்பாளர்கள்" உள்ளனர் என்ற PAS
எம்பியின் கூற்றை அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
PKR தகவல் தொடர்புத் துணைத்
தலைவர் சுவா வெய் கியாட், PN இன்னும் உயர்
பதவிக்கான வேட்பாளரை முடிவு செய்யவில்லை என்றும், அதன் கூட்டணி உறுப்புக் கட்சிகள் இந்த விவகாரத்தில்
பிளவுபட்டுள்ளன என்றும் கூறினார்.
PN அதன் தலைவர்களில்
யார் பிரதமராக இருக்கத் தகுதியானவர் என்பதில் ஒருமித்த கருத்தை எட்ட
முடியாவிட்டால், அந்த வேட்பாளரை
அன்வாருடன் மக்கள் ஒப்பிட முடியாது என்று அவர் கூறினார்.
PN நாட்டை நன்றாக ஆள
முடியும் என்று மக்கள் எப்படி நம்ப முடியும்? என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *