இது புண்படுத்தும் செயல் மட்டுமல்ல; கலாச்சார புரிதல் இல்லாத செயல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 5: மத நடைமுறைகளை கேலி செய்வது, ஒரு இணக்கமான சமூகத்திற்கு அவசியமான பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று தேசிய ஒற்றுமைத்துறை  துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ரோவுக்குச் சொந்தமான வானொலி நிலையத்தைச் சேர்ந்த மூன்று தொகுப்பாளர்கள் மத சடங்குகளை கேலி செய்வதைக் காட்டும் ஒரு வைரல் வீடியோவைக் குறிப்பிட்டுப் பேசிய அவர்,  இதுபோன்ற செயல்கள் புண்படுத்தும் செயல் மட்டுமல்ல, கலாச்சார மற்றும் மத உணர்திறன் இல்லாததையும் பிரதிபலிக்கின்றன என்று கூறினார்.

பொது மனப்பான்மையை வடிவமைப்பதில் ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. மேலும் அவை மலேசியாவின் பன்முக கலாச்சார பாரம்பரியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

 இது போன்ற ஓர் உணர்ச்சியற்ற செயல், தேசிய ஒற்றுமை நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் அமைச்சகத்தின் இடைவிடாத முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண்பதில் தகவல் தொடர்புத்துறை அமைச்சின் விரைவான நடவடிக்கைக்காக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சிலுக்கு அவர் தமது  பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Timbalan Menteri Perpaduan Negara, Senator Saraswathy Kandasamy menegaskan bahawa mempersendakan amalan keagamaan merosakkan nilai hormat dan kefahaman dalam masyarakat. Merujuk kepada video kontroversi penyampai radio Astro, beliau menggesa media menghormati kepelbagaian budaya. Beliau turut menghargai tindakan pantas Kementerian Komunikasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *