இஸ்மாயில் சப்ரி வழக்கு விவகாரம்... நானும்தான் இதே சூழ்நிலையில் இருந்தேன்! -ஜாஹிட் ஹமிடி

- Shan Siva
- 08 Mar, 2025
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடர்பான வழக்கை விசாரிப்பதில் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் நியாயமாகவும் தொழில் ரீதியாகவும் செயல்படும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
47 குற்றவியல்
குற்றச்சாட்டுகள் மீதான தனது சொந்த விசாரணையிலிருந்து இந்த நம்பிக்கை உருவாகிறது
என்றும், அதில் தாம் நிபந்தனையுடன்
விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதில் ஊழல், குற்றவியல் நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி
குற்றச்சாட்டுகள் போன்றவையும் அக்குற்றச்சாட்டுகளில் அடங்கும் என்று சுட்டிக்காட்டினார்.
தனிப்பட்ட
முறையில், தாமும் இதேபோன்ற
சூழ்நிலையில் இருந்தேன், தனது வழக்கு
நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டது என்று அவர் கூறினார்.
நீதிமன்றத்திலும் இஸ்மாயிலின் வழக்குக்கு இதுவே நடக்கும் என்று நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Timbalan Perdana Menteri Ahmad Zahid Hamidi yakin Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) akan bertindak adil dalam siasatan terhadap bekas Perdana Menteri Ismail Sabri Yaakob. Beliau merujuk kepada kesnya sendiri, di mana meskipun menghadapi pelbagai tuduhan, akhirnya keadilan ditegakkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *