அரசியலமைப்பு திருத்த மசோதா 2025-ஐ ஆதரிக்க வேண்டும்! – அன்வார்

- Shan Siva
- 04 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 4: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா 2025 ஐ முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது பிரிவுகள் 56,
57 மற்றும் 65 இல் மாற்றங்களை முன்மொழிகிறது.
அதே போல் நாடாளுமன்ற சேவை மசோதா 2025 ஐயும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக
ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மலேசியாவின்
எதிர்காலத்தை மிகவும் வெளிப்படையானதாகவும், அதிக நேர்மை மற்றும் நம்பகத்தன்மையுடனும் வடிவமைக்கும் ஒரு
மரபு என்று அவர் விவரித்தார்.
அரசியலமைப்பு
(திருத்தம்) மசோதா 2025 என்பது வெறும் சிறிய மாற்றம் அல்ல, ஆனால் நாடாளுமன்றம் உண்மையிலேயே சுதந்திரமான, அதிகாரப்பூர்வமான மற்றும் போட்டித்தன்மை
வாய்ந்த சட்டமன்ற அமைப்பாக செயல்படுவதை உறுதிசெய்ய அதிகாரங்களைப் பிரிப்பதற்கான
கோட்பாட்டை வலுப்படுத்துகிறது என்றும் அன்வார் கூறினார்.
மடானி அரசாங்கத்தின்
துணிச்சலான நடவடிக்கையைக் குறிக்கும் வகையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தம் இது. இந்த
நடவடிக்கை நாடாளுமன்றத்தை உண்மையிலேயே சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட அமைப்பாகச்
செயல்பட உதவும்.
அதிகாரங்களைப்
பிரிப்பதன் வலிமை அதன் சமநிலையில் உள்ளது என் று குறிப்பிட்ட அன்வார், எந்தவொரு
தரப்பினரிடமிருந்தும் அதிகப்படியான கட்டுப்பாட்டைத் தடுப்பதன் மூலம், நீதி நிலைநிறுத்தப்படுகிறது, சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன மற்றும்
அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று விளக்கினார்.
அரசியலமைப்பு
(திருத்த) மசோதா 2025 மற்றும் நாடாளுமன்ற சேவைகள் மசோதா 2025 ஆகியவை பிப்ரவரி 24
அன்று நாடாளுமன்றத்தில் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்பட்டன.
அரசியலமைப்பு (திருத்த) மசோதா 2025 கூட்டரசு அரசியலமைப்பை திருத்த முயல்கிறது. இதில் புதிய பிரிவு (5A) உருவாக்குவதோடு, பிரிவுகள் 56 மற்றும் 57 ஐ திருத்துவதும் அடங்கும்.
Perdana Menteri Anwar Ibrahim menggesa semua Ahli Parlimen menyokong penuh Rang Undang-Undang Perkhidmatan Parlimen dan Pindaan Perlembagaan 2025. Pindaan ini memperkukuh prinsip pemisahan kuasa, memastikan Parlimen lebih bebas, berwibawa dan kompetitif, serta menghalang penyalahgunaan kuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *