பத்திரிகையாளர் பி.நந்தகுமார் கைது! RM 20,000 லஞ்சம் பெற்று கையோடு பிடிபட்டார்! MACC அதிரடி!

top-news

(இரா.கோபி)

கோலாலம்பூர், மார்ச் 1: வெளிநாட்டு தொழிலாளர்களைக் கையாளும் முகவர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மலேசியாகினி பத்திரிகையாளர் பி. நந்த குமார் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.

மலேசியாகினியிடம் பேசிய அசாம், வெளிநாட்டு கடத்தல் கும்பலை அம்பலப்படுத்திய மலேசியாகினியின் சமீபத்திய கட்டுரை காரணமாக கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதை மறுத்தார்.

முகவர் தொடர்பான இரண்டு கட்டுரைகளை வெளியிடாததற்கு ஈடாக, முகவரிடமிருந்து நந்தகுமார் RM100,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.

இறுதியில் அந்தத் தொகை RM20,000 ஆகக் குறைக்கப்பட்டதாக அசாம் கூறினார்.

முகவர் MACC-க்கு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். பின்னர் முகவர் ஷா ஆலமில் உள்ள கான்கார்ட் ஹோட்டலில் பி.நந்தகுமார் எனும் பத்திரிகையாளரைச் சந்தித்தார். அங்கு பணம் பத்திரிகையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை அடுத்து எம்ஏசிசி அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பத்திரிகையாளரை RM20,000 உடன் கைது செய்தனர் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் பி.நந்தகுமார் எனும் அந்த பத்திரிகையாளரை நான்கு நாட்கள் காவலில் வைக்குமாறு எம்ஏசிசி விடுத்த விண்ணப்பத்தை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது.

2018 முதல் மலேசியாகினியில் வேலை செய்து வருகிறார் நந்தா.

இதனிடையே, மலேசியாகினி நிர்வாக ஆசிரியர் ஆர்.கே. ஆனந்த் மற்றும் நிர்வாக ஆசிரியர் இங் லிங் ஃபோங் ஆகியோர், அதன் பத்திரிகையாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளால் செய்தி இணையதளம் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினர்.

 என்ன நடந்தது என்பது குறித்து நந்தாவின் விளக்கத்தை நாங்கள் கேட்கவில்லை. இருப்பினும், எங்கள் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு தவறான நடத்தைக்கும் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்று அவர்கள் மலேசியா கினி செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கு பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் அறிகை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மலேசியாகினி MACC அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று அவர்கள் மேலும் கூறினர்.

Wartawan Malaysiakini, P. Nanda Kumar, ditahan oleh SPRM atas dakwaan menerima rasuah RM20,000 daripada ejen pengurusan pekerja asing. Beliau direman empat hari oleh Mahkamah Majistret Putrajaya. Malaysiakini menyatakan kejutan terhadap penahanan itu dan berjanji memberi kerjasama penuh kepada pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *