அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் மறு பரிசீலனை செய்யப்படும்! - போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி

- Shan Siva
- 22 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 22: இன்று காலை தித்தி வங்சா எல்ஆர்டி நிலையத்தில்
தண்டவாளத்தில் பார்வையற்ற ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து, அனைத்து ரயில் நிலைய இயக்குநர்களும் தங்கள் பாதுகாப்பு
அம்சங்களை மறுபரிசீலனை செய்து மேம்படுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக்
உத்தரவிட்டுள்ளார்.
தனது அமைச்சகம்
தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும், குறிப்பாக எல்ஆர்டி ஆபரேட்டர் பிரசரானா மலேசியா பெர்ஹாட் உடன், விரிவான விசாரணையை நடத்தவுள்ளதாக அவர் ஒரு
பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
அனைத்து ரயில்
நிலையங்களிலும், குறிப்பாக
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் (ஓகேயு) மதிப்பாய்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட
வேண்டும் எதாம் அறிவுறுத்தியுள்ளதாக அவர்
கூறினார்.
இதேபோன்ற
சம்பவங்களைத் தடுக்க, நிலையங்களில்
அதிக ஆபத்துள்ள நடத்தைகளைக் கண்டறியும் திறன் கொண்ட ஸ்மார்ட் சிசிடிவி கேமராக்களை
நிறுவுவது உட்பட பல நடவடிக்கைகளை பிரசரானா செயல்படுத்தும் என்று லோக் கூறினார்.
நீண்ட காலமாக,
பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து
எல்ஆர்டி வழித்தடங்களிலும் பிளாட்ஃபார்ம் திரைக் கதவுகளை நிறுவ பிரசரானா
திட்டமிட்டுள்ளது.
இன்று முன்னதாக,
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை
பாதிக்கப்பட்ட பார்வையற்றவர் அந்நபர் ஒரு சீனர் என அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட
விசாரணையில், அந்த நபர்
ரயிலில் மோதுவதற்கு முன்பு சமநிலையை இழந்து தண்டவாளத்தில் விழுந்ததாகக்
கூறப்படுகிறது.
கூடுதல் உதவி
தேவைப்படும் அனைத்து ரயில் பயணிகளும், OKU-க்கள் உட்படநிலையங்களில் உள்ள துணை காவல்துறையினரை அணுகுமாறு லோக்
அறிவுறுத்தினார்.
பயணிகள்
பாதுகாப்பு மற்றும் நலன் எப்போதும் தங்கள் முன்னுரிமை என்று அவர் கூறினார்.
அனைத்து
மலேசியர்களின் நலனுக்காகவும், பாதுகாப்பான பயணத்திற்காகவும்
பொதுப் போக்குவரத்து அமைப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர்
கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *