இந்தியர்கள் வருத்தத்தில் உள்ளனர்! அரசுக்கு ராயர் எச்சரிக்கை!

- Shan Siva
- 05 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 5: பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த இந்திய வாக்காளர்களின்
கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு டிஏபி எம்பி ஒருவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் பெரிய அளவில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக இந்தியர்கள் உணர்கிறார்கள்
என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, இந்திய சமூகத்தின் நம்பிக்கையையும் ஆதரவையும் மீட்டெடுக்க அரசாங்கம்
விரைவாகச் செயல்பட வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.எஸ்.என்.
ராயர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில், மலேசியாவில் உள்ள
இந்திய சமூகத்தினர், குறிப்பாக (அன்வார்) தீவிர ஆதரவாளர்கள், தங்கள் கவலைகளை
வெளிப்படுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
(அன்வாரை) முழுமையாக ஆதரிக்கும் இந்த வாக்காளர்கள், இந்தியர்
தொடர்பான விஷயங்களுக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை என்று நினைப்பதாகவும், இது குறித்து தாம் கவலைப்படுவதாகவும்
மக்களவையில் அரச உரையை விவாதிக்கும் போது ராயர் இவ்வாறு கூறினார்.
குறிப்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல தரப்பினர், இந்திய
வாக்காளர்களிடையே அரசாங்கத்திற்கான ஆதரவு குறைந்து வருவதாகக் கூறியுள்ளனர்.
மித்ரா போன்ற சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை
நிவர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பிரிவிற்கான வருடாந்திர ஒதுக்கீட்டை
அதிகரிக்கத் தவறியது போன்ற பிரச்சினைகளை இதற்கு உதாரணமாகக் கூறுகின்றனர் என்று அவர்
எடுத்துரைத்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த கோலா குபு பாரு இடைத்தேர்தலில் இந்த சமூகம் ஒரு முக்கிய வாக்களிக்கும் சக்தியாக இருந்தது, இரு தரப்பினரும் இந்தியர்களின் ஆதரவை பெரிதும் தேடினர் என்று அவர் நினைவூட்டினார்.
இதற்கு பதிலளித்த அன்வார், கடந்த ஆண்டு மே மாதம், இந்திய சமூகத்தை
மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு முயற்சிகள், அரசாங்கத்தால்
அவர்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கின்றன என்று அன்வார்
கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *