8 லட்சம் மலேசியர்களுக்கு AI வாய்ப்பு வழங்குகிறது மைக்ரோசாஃப்ட்! - துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், பிப் 13: இந்திய இளைஞர்களிடையே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆற்றலை மேம்படுத்தும் தீவிர முயற்சியை தேசிய ஒற்றுமைத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியின் 'அறம்' இயக்கம் முன்னெடுத்துள்ளது. 

இந்திய இளைஞர்களிடையே செயற்கை நுண்ணறிவு மீதான விழிப்புணர்வு மிக அவசியம் என துணையமைச்சர் சரஸ்வதி கூறினார். 

பினாங்கு தைப்பூச கொண்டாட்டத்தையொட்டி அறம் இயக்கம் ஏற்பாடு செய்த முகப்பிடத்தில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு பேசினார். 

நமது இந்திய இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 800,000 மலேசியர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவை புகுத்த மைக்ரோசாப்ட் திட்டம் கொண்டுள்ளது. 

இதற்கு ஏற்ப அறம் இந்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றும் என அவர் சுட்டிக் காட்டினார். 

அறம் இயக்கம் மேற்கொண்டு வரும் இந்த முயற்சி குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார். 

இந்திய இளைஞர்கள் இந்த விவகாரத்தில் அதிக ஆர்வத்தை காட்டி வருகின்றனர். இது தமக்கு மன நிறைவு அளிப்பதாக அவர் கூறினார். 

தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இளைய பக்தர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

துணையமைச்சர் சரஸ்வதி தலைமையிலான இந்த முயற்சியை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் வெகுவாகப் பாராட்டினார். 

செயற்கை நுண்ணறிவு தொடர்பான முயற்சிகளில் இளைஞர்களை ஈடுபடுத்த தாமும் ஆதரவு வழங்குவதாக கோபிந்த் சிங் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *