தைப்பூசத்தை முன்னிட்டு இலவச ரயில் & பேருந்து சேவை! அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு!

- Shan Siva
- 04 Feb, 2025
கொம்பாக், பிப் 4 : தைப்பூச காலத்தில் பக்த பெருமக்களின் வசதிக்காக KTMB பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 24 மணி நேர ரயில் சேவையை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை கிள்ளான்
பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து KTM
கம்யூட்டர்
நிலையங்களிலும் கிடைக்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்நிலையில் பிப்ரவரி
10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இலவச சவாரிகள் வழங்கப்படும் என்றும்
அவர் கூறினார்.
தற்போது, கேடிஎம் தினமும் 96 பயணங்களை இயக்குகிறது. அதிகரித்து வரும்
தேவையை பூர்த்தி செய்ய, KTMB ஒரு நாளைக்கு 44 கூடுதல் பயணங்களை
அறிமுகப்படுத்தும், மொத்தம் 140 ஆக இது அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
குறிப்பாக
சனிக்கிழமை வழிபாட்டாளர்கள் அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தமாக, நான்கு பகல்கள் மற்றும் மூன்று இரவுகளில், 118 கூடுதல் சேவைகள்
வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு நாளும்
வழக்கமான கடைசி ரயிலுக்குப் பிறகு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். அவை இரவு 9.55 மணிக்கு பூலாவ் சிப்பாங்கிலிருந்து பத்து மலைக்கும், இரவு 9.30 மணிக்கு கிள்ளானிலிருந்து பத்து மலைக்கும்
தொடங்கும்.
கேஎல் சென்ட்ரல்
பயனர்களுக்கு, சேவைகள் அடிக்கடி இயங்கும், வழக்கமான ஒரு மணி நேர இடைவெளியுடன் ஒப்பிடும்போது, காலை 9:30 மணி முதல் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் இயங்கும என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாக, சுமார் 5 லட்சம் பயணிகள் இந்த சேவையைப்
பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
மேலும், பிரசாரானா
மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் பசார் சினி, கொம்பாக், கம்போங் பாரு எம்.ஆர்.டி
ஆகிய இடங்களுக்கு இலவச பேருந்து சேவையும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு பிப்ரவரி 10, 11ஆம் தேதிகளில் வழங்கப்படவிருப்பதாக லோக் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநிலத்திலும் பிப்ரவரி 10,11ஆம் தேதிகளில் இலவச
பேருந்து சேவை வழங்கப்படவுள்ளதாகவும், பொதுமக்கள்
இந்த இலவச சேவைகளைப் பயன்படுத்தி தைப்பூசத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்றும்
அந்தோணி லோக் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *