சிங்கப்பூரில் மலேசியருக்கு வரும் வியாழக்கிழமை தூக்கு! உடனே நிறுத்தக்கோரி அரசுக்கு Amnesty International வேண்டுகோள்!

- Shan Siva
- 17 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 17: சிங்கப்பூர் அரசால் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனயை எதிர்நோக்கியிருக்கும் மலேசிய ஆடவர் பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு சிங்கப்பூர் விதித்த மரண தண்டனை சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில்
மனித உரிமைகள் பாதுகாப்பு மீறல்கள் இருப்பதாகக் கூறி, வியாழக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பன்னீர் செல்வத்தில் மரண தண்டனையை நிறுத்த மலேசிய அரசாங்கம் தலையிட
வேண்டும் என்று Amnesty International வலியுறுத்தியுள்ளது.
போதைப்பொருள்
தொடர்பான குற்றங்களுக்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு 'மிகக் கடுமையான குற்றங்களின்' வரம்பை பூர்த்தி செய்யவில்லை. எனவே, இந்த தண்டனையைப் பயன்படுத்துவது சர்வதேச மனித
உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளின் கீழ் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவ்வமைப்பு
கேட்டுக்கொண்டுள்ளது.
ஆசியான் தற்போதைய
தலைவரும் சிங்கப்பூருடன் வலுவான உறவுகளைக் கொண்ட அண்டை நாடாகவும் இருப்பதால்,
மலேசியா பன்னிர் செல்வத்தின் வழக்கில் தலையிட
வேண்டும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் அறிவுறுத்தியுள்ளது.
51.84 கிராம்
டயமார்ஃபின் (ஹெராயின்) போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கடந்த உதவியதற்காக பன்னிர்
செல்வம் 2017 இல் குற்றவாளி
என அறிவிக்கப்பட்டார். இந்தக் குற்றம் செப்டம்பர் 3, 2014 அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நிகழ்ந்தது.
சிங்கப்பூரின்
போதைப்பொருள் சட்டங்களின் கீழ், 15 கிராமுக்கு மேல்
ஹெராயின் இருந்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *