சுயநினைவற்ற நிலையில் இஸ்மாயில் சப்ரி! மருத்துவமனையில் அனுமதி
.jpg)
- Shan Siva
- 22 Feb, 2025
பெட்டாலிங் ஜெயா, பிப் 22: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று காலை சுயநினைவின்றி காணப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது உதவியாளர் இக்மல் ஹக்கீம் ஒரு சுருக்கமான செய்தியில் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். ஆனால் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.
அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள், என்று உதவியாளர் கூறினார்.
மற்றொரு உதவியாளர் அஸ்ரான் ஃபித்ரி ரஹீமும் பேஸ்புக் பதிவில் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
65 வயதான இஸ்மாயில் அதிகாலை 2.30 மணியளவில் கோத்தா டாமன்சாராவில் உள்ள சன்வே மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *