யாரையும் குறைகூற விரும்பவில்லை எங்கள் மகனுக்கு நிகழ்ந்தது வேறு எந்தக் குழந்தைக்கும் நிகழக்கூடாது! - மிட்டாய் சாப்பிட்டு இறந்த மகனின் தந்தை உருக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 21: கம்மி மிட்டாய் சாப்பிட்டு மூச்சுத் திணறி இறந்த 10 வயது சிறுவனின் தந்தை சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

35 வயதான ஃபக்ருதீன் ஃபிக்ரி,  தனது மகன் ஃபஹ்மியின் மரணத்திற்கு வழிவகுத்த சம்பவத்திற்கு யாரையும் குறை கூறவில்லை என்றும்  தனது மகன் ஃபஹ்மி ஹபீஸுக்கு நடந்தது வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது என்று மட்டுமே தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்றும்,  ஆனால் பள்ளி மைதானத்தில்ஃபஹ்மி மிட்டாய் சாப்பிட்டு மூச்சுத் திணறி இறந்ததால் சட்ட நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 எங்கள் குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட இந்த விதியை நானும் என் மனைவியும் ஏற்றுக்கொள்கிறோம் என்று ஃபக்ருதீன் கூறினார்.

ஃபக்ருதீன் மற்றும் அவரது மனைவி நூரைனி இசா (37) ஆகியோர் இன்று கம்போங் பெர்மாத்தாங் பிஞ்சாய் முஸ்லிம் கல்லறையில் ஃபஹ்மியின் இறுதிச் சடங்குகளை நடத்தினர். அவர்களுடன் குடும்ப உறுப்பினர்கள், உள்ளூர்வாசிகள், ஆசிரியர்கள் மற்றும் ஃபஹ்மியின் நண்பர்கள் உட்பட 150 பேர் இணைந்தனர்.

4 ஆம் வகுப்பு மாணவரான ஃபஹ்மி, செவ்வாயன்று பட்டர்வொர்த்தில் உள்ள எஸ்.கே. சுங்கை துவாவுக்கு வெளியே வாங்கிய கம்மி மிட்டாயைச் சாப்பிட்டு, மூச்சுத் திணறினார். சம்பவத்திற்குப் பிறகு அவர் ஆபத்தான நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மருத்துவமனையில் இறந்தார்.

பிரேத பரிசோதனையில் அவர் மிட்டாய் உட்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் மூளை பாதிப்பு ஏற்பட்டு இறந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில்  சுகாதார அமைச்ச்சு மிட்டாய் விற்பனையைத் தடை செய்துள்ளதோடு, மிட்டாயைக் கைப்பற்றுவதாகவும், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *