நானும் இந்திய ரத்தம்தான்! மன்னித்துவிடுங்கள்! ‘வேல் – வேல்’ சர்ச்சை வீடியோவில் ஆடியவர் பகிரங்க மன்னிப்பு!

- Shan Siva
- 04 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 4: தைப்பூசத்தின் போது நிகழ்த்தப்படும் புனிதமான சடங்குகளில் ஒன்றான, இந்து காவடி நடனத்தை கேலி செய்த சர்ச்சைக்குரிய வீடியோவுக்கு எரா எஃப்எம்மின் 3 பாகி எரா நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
ஸ்டேஷனின் சமூக
ஊடக தளங்களில் இருந்து இப்போது நீக்கப்பட்ட சம்பந்தபட்ட வீடியோவில், ‘வேல் வேல்’ என்று கோஷமிட்டு
சிரித்துக்கொண்டே காவடி நடனத்தை கேலி செய்வதைப் போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இது சர்ச்சையானதை
அடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர்
வெளியிட்ட பதிவில், தாங்கள் யாரையும்
புண்படுத்த நினைக்கவில்லை என்றும், மேலும் ஒவ்வொரு
நபரின் நம்பிக்கைகளையும் மதிப்புகளையும்
ஆழமாக மதிப்பதாகவும், எதிர்காலத்தில்
மிகவும் கவனமாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும்
விமர்சனங்களையும் பெறுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். மீண்டும் ஒருமுறை, நாங்கள் அறியாமல் செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து எங்களை
மன்னியுங்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதில் கேலியாக நடனமாடியவர், தனியாக ஒரு வீடியோவை வெளியிட்டு தனது மன்னிப்பைத் தெரிவித்துள்ளார். அதில், நானும் ஓர் இந்திய ரத்தம்தான். இந்திய உறவுகள் என்னை மன்னித்துவிடுங்கள். சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி என எல்லா உறவுகளும் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தெரியாமல் இந்த தவறு நடந்துவிட்டது. அதற்காக அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்!
Tiga penyampai radio Era FM meminta maaf atas video kontroversi yang didakwa mempersendakan tarian kavadi semasa Thaipusam. Video itu telah dipadam, dan mereka berkata tidak berniat menyinggung sesiapa. Individu dalam video turut memohon maaf, mengakui kesilapannya dan berharap dimaafkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *