Era FM ஒலிபரப்பு நிறுவனத்திற்கு RM 250,000 அபராதம்!

- Shan Siva
- 11 Mar, 2025
பெட்டாலிங் ஜெயா:
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, Era FM இன் ஒளிபரப்பு உரிமத்தை இடைநிறுத்த வேண்டாம் என்று முடிவு
செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்
மேல்முறையீட்டை மதிப்பாய்வு செய்து இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஒலிபரப்பு நிறுவனமான மேஸ்ட்ரா
பிராட்காஸ்டின் உரிமத்தை இடைநிறுத்துவதற்கான நோக்க அறிவிப்பை முதலில் வெளியிட்டதாக
MCMC ஒரு அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
இருப்பினும்,
நிறுவனத்தின் மேல்முறையீட்டை மதிப்பாய்வு
செய்து, உரிமம் வைத்திருப்பவர்
எடுத்த சரியான நடவடிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து முறையான
மன்னிப்பு உட்பட பல காரணிகளைக் கருத்தில் கொண்ட பிறகு, உரிமத்தை இடைநிறுத்துவதை ஆணையம் மீட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே உரிமத்தின்
கீழ் இயங்கும் மற்ற வானொலி நிலையங்களான மெலடி மற்றும் மிக்ஸ் எஃப்எம் ஆகியவற்றில்
ஏற்படக்கூடிய தாக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டதாக எம்சிஎம்சி
தெரிவித்துள்ளது.
நெட்வொர்க்
வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதற்காக, 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின்
பிரிவு 233 ஐ மீறியதற்காக
மேஸ்ட்ரா பிராட்காஸ்ட்டுக்கு RM250,000 அபராதம் விதிக்கப்பட்டது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டத்துறை தலைமை அலுவலகத்தின் ஒப்புதலை
ஆணையம் பெற்ற பிறகு அபராதம் விதிக்கப்பட்டதாக MCMC தெரிவித்துள்ளது.
மலேசியாவின் பல்லின சமூகத்தில் மத பதற்றத்தைத் தூண்டும் அல்லது நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு ஆன்லைன் உள்ளடக்கத்தையும் பதிவேற்றுவதை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் mcmc எச்சரித்துள்ளது!
MCMC membatalkan keputusan menggantung lesen siaran Era FM selepas menilai rayuan Maestro Broadcast. Keputusan ini mempertimbangkan tindakan pembetulan dan permohonan maaf syarikat. Namun, Maestro dikenakan denda RM250,000 kerana melanggar Akta Komunikasi dan Multimedia 1998 atas penggunaan kemudahan rangkaian secara tidak wajar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *