தேசத்தின் தூண்களாகப் பெண்கள்! - பேரரசியாரின் மகளிர் தின வாழ்த்து

- Shan Siva
- 08 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 8: மாட்சிமை தங்கிய மலேசிய பேரரசியார் ராஜா ஸரித் சோபியா, 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில், மலேசியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் தனது மகளிர்தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான
கருப்பொருளான Wanita Beraspirasi Membina Legasi' உடன், பெண்கள் மீதான
தனது ஆழ்ந்த பாராட்டுகளை அவர் வெளிப்படுத்தியதுடன், பெண்கள் குடும்பம், சமூகம் மற்றும்
தேசத்தின் தூண்களாக விளங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
குடும்ப வட்டத்திற்குள்
மட்டுமல்லாமல், பல்வேறு தொழில்துறைகளிலும்
பெண்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் அவர் பாராட்டினார்.
சவால்களைச்
சமாளிப்பதில் பெண்களின் புத்திசாலித்தனமும் ஞானமும் எதிர்கால சந்ததியினருக்கு ஓர்
அர்த்தமுள்ள மரபை உருவாக்குவதில் அவர்களை உத்வேகத்தின் ஆதாரமாக ஆக்குகின்றன என்று கூறினார்.
ஒவ்வொரு பெண்ணும் தனது அனைத்து முயற்சிகளிலும் மீள்தன்மையுடனும் ஆர்வத்துடனும் இருக்க வேண்டும் என்றும் தாம் பிரார்த்திப்பதாக பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில்
Raja Permaisuri Agong, Raja Zarith Sofiah, menyampaikan ucapan Selamat Hari Wanita kepada semua wanita di Malaysia. Baginda menghargai sumbangan wanita dalam keluarga, masyarakat, dan negara, serta menekankan kepentingan kebijaksanaan dan ketahanan wanita dalam membentuk legasi masa depan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *