30 புதிய விமானங்களை வாங்குகிறது மலேசியா ஏர்லைன்ஸ்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 21: மலேசியாவின் தேசிய விமான நிறுவனம் தனது பழைய விமானங்களுக்குப் பதிலாக 30 புதிய விமானங்களைப் பெறும் என்றும், வரும் ஆண்டுகளில் மேலும் 30 விமானங்களை வாங்கும் விருப்பத்தைக் கொண்டுள்ளதாகவும் அதன் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸை பாதித்த சிக்கல்களைத் தவிர்க்க இந்த கொள்முதல் அவசியம் என்று மலேசிய விமானக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ கேப்டன் இஷாம் இஸ்மாயில் கூறினார்.

30 புதிய விமானங்களில் 18 போயிங் 737-8 விமானங்களும், CFM இன்டர்நேஷனல் LEAP-18 என்ஜின்களால் இயக்கப்படும் 12 போயிங் 737-10 விமானங்களும் அடங்கும் என்று இஷாம் இன்று அறிவித்தார்.

இது மலேசிய ஏர்லைன்ஸுக்கு மிக முக்கியமான மைல்கல் என்று போயிங் நிறுவனத்துடனான ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக்கொள்ளும் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்! 

Malaysia Airlines akan memperoleh 30 pesawat baharu bagi menggantikan pesawat lama, dengan pilihan membeli 30 lagi pada masa hadapan. CEO Datuk Captain Izham Ismail menyatakan pembelian ini penting bagi mengelakkan isu terdahulu, termasuk pesawat Boeing 737-8 dan 737-10.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *