சீனா - மலேசியா Free Visa மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

- Shan Siva
- 22 Apr, 2025
புத்ராஜெயா, ஏப்ரல் 22: சீன சுற்றுப் பயணிகளுக்கான விசா தாராளமயமாக்கல்
திட்டம் (PLV) மேலும் ஐந்து
ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த முயற்சி நாட்டின் பொருளாதாரத்தில் உடனடி நேர்மறையான தாக்கத்தைக்
காட்டியுள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்
கூறினார்.
சீன அதிபர் ஜி
ஜின்பிங்கின் அண்மைய மலேசிய பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள் (MoU) மற்றும் பல்வேறு
துறைகளின் ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஆவணங்களின் ஒரு பகுதியாக PLV எனப்படும் இந்த
விசா நீட்டிக்கும் முடிவு
இருப்பதாக அவர் கூறினார்.
அவற்றில் பொது
விவகாரங்கள் மற்றும் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான கூட்டு விசா
விலக்கு ஒப்பந்தம் இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இதில் தாமும், சீனாவின்
வெளியுறவு அமைச்சர் வாங் யியும் கையெழுத்திட்டதாகக் கூறினார்.
அதே காலகட்டத்தில் சீனாவும் மலேசிய குடிமக்களுக்கு இந்த விசா நீட்டிப்பை
வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாங்கள் அதை நீட்டிப்போம்,
அதன் பிறகு, அதை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிக்க ஒரு வழி
இருக்கும் என்று கூறினார். மேலும் அந்த விசா
சீன நாட்டினர் சுற்றுலாப் பயணிகளாக 90 நாட்கள் வரை நம் நாட்டில் தங்க அனுமதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *