SPM தேர்வில் மொத்தம் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், எப்ரல் 24:  SPM தேர்வில் மொத்தம் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A மதிப்பெண்களைப் பெற்றதாக கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

பஹாசா மலேசியா மற்றும் வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கிய பின்னர், இந்த ஆண்டு முடிவுகள் 11 ஆண்டுகளில் சிறந்த முடிவுகளாக அமைந்துள்ளதாக கல்வித்துறை தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் கூறினார்.

2023 SPM தேர்வு முடிவுகளில் பதிவு செய்யப்பட்ட 11,713 மாணவர்களை விட 14,179 நேரடி A மதிப்பெண்கள் அதிகரிப்பு என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டில் 131,489 ஆக இருந்தது, இது 136,791 ஆக அதிகரித்துள்ளது.

தேர்வில் பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 2023 இல் 8,676 ஆக இருந்த நிலையில், இந்த தேர்வில்  6,246 ஆகக் குறைந்துள்ளதாக அஸ்மான் கூறினார்!

Sebanyak 14,179 pelajar memperoleh semua A dalam SPM 2023, meningkat berbanding 11,713 pada 2022. Keputusan kali ini dianggap terbaik dalam 11 tahun, dengan peningkatan jumlah calon lulus dan penurunan bilangan yang tidak hadir, menurut Kementerian Pendidikan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *